தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

October 29, 2014

பிறமத சகோதரிக்கு குடிசை வீடு!

பரங்கிப்பேட்டை, அக்.29: தொடர் மழையின் காரணமாக குடிசை வீடு முற்றிலும் பாதிக்கப்பட்டு மூன்று பெண் பிள்ளைகளை வைத்துகொண்டு படுக்க கூட வழியில்லாமல் கஷ்ப்பட்ட வந்த கனவனை இழந்த மீனா என்கிற பிறமத சகோதரிக்கு 27.10.2014 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை‬ கிளை சார்பாக ரூபாய்.15,000/- மதிப்பில் புதிய குடிசை வீடு கட்டி கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!

October 26, 2014

காவல்துறையினர்யிடமும் தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம்!

பரங்கிப்பேட்டை, அக்.26: காவல்துறையினர்யிடமும் தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம்...முட்லூரில் தீவிரவாதப் எதிர்ப்பு பிரச்சாரம்...!

பரங்கிப்பேட்டை, அக்.26: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ‪சூ‎பரங்கிப்பேட்டை‬ கிளை சார்பாக‪ ”தீவிரவாதத்திற்கு‬ எதிராக முஸ்லிம்களின்‬ தீவிர பிரச்சாரம்” 26.10.2014 அன்று மாலை ‪பி.‎முட்லூர்‬ பகுதியில் பஸ்களிலும், பஸ்க்காக காந்திருந்த பயணிகளிடமும் மற்றும் கடைகளிலும்‪ “‎இஸ்லாம்‬ தீவிரவாத்தைப் போதிக்கின்றதா?” என்ற தலைப்பில் பிரசுரங்கள் வழங்கப்பட்டு பிரச்சாரமும் செய்யப்பட்டது.

பிறமத சகோதர, சகோதரிகள் ஆர்வமுடன் வாங்கி படித்தனர். அல்ஹம்துலில்லாஹ்!

October 25, 2014

பில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம் - புத்தகம் வழங்குதல்!

பரங்கிப்பேட்டை, அக்.25: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை‬ கிளை நிர்வாகிகளுக்கு மாநில தலைமை மூலம் வழகப்பட்ட ”பில்லி‪சூ‎சூனியம்‬ ஒரு பித்தலாட்டம்” புத்தகம் 24.10.2014 அன்று கடலூர் மாவட்ட துணை செயலாளர் சகோ.ஃபாஜல் ஹுசைன் வழங்கினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!

குடிசை வீட்டிற்கு கீற்றுகள் உதவி!

பரங்கிப்பேட்டை, அக்.25: அல்லாஹுவின் உதவியால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளை சார்பாக குர்பானி தோல் விற்ற பணத்தின் மூலம் 25.10.2014 அன்று ரூபாய்.6,300/- மதிப்பில் ஒரு சகோதரரின் குடிசை வீட்டிற்கு கீற்றுகள் வாங்கி கொடுக்கப்பட்டது. அஹ்மதுலில்லாஹ்!

October 24, 2014

உணர்வு விற்பனை - 24.10.2014

பரங்கிப்பேட்டை, அக்.24: பரங்கிப்பேட்டை TNTJ மர்கஸ் 24.10.2014 அன்று ஜுமுஆ உணர்வு விற்பனை!

October 19, 2014

தொடர் மழையிலும் இரெயில் நிலையத்தில் தீவிரவாதப் எதிப்பு பிரச்சாரம்!

பரங்கிப்பேட்டை, அக்.19: அல்லாஹுவின் உதவியால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்‪ பரங்கிப்பேட்டை‬ கிளை சார்பாக 19.10.2014 அன்று பரங்கிப்பேட்டையில் தொடர் ‪கன மழையிலும்‬ ‪‎இரயில்‬ நிலையத்திலும் மற்றும் இரெயிலும் ‪முஸ்லிம்களின்‬‪ ‎தீவிரவாதப்‬ எதிர்ப்பு பிரச்சாரம் செய்யப்பட்டது.
.

பொதுக்குழு - நிர்வாகிகள் தேர்வு!

பரங்கிப்பேட்டை, அக்.19: அல்லாஹுவின் கிருபையால் தமிழ்நாடு தவஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளையின் பொதுக்குழு இன்று (19.10.2014) மாவட்ட துணை செயலாளர் சகோ.ஃபாஜல் ஹுசைன் தலைமையில் காலை 10.30 மணியளவில் TNTJ  மர்கஸில் நடைபெற்றது.

October 17, 2014

பரங்கிப்பேட்டை TNTJ நகர பொதுக்குழு அறிவிப்பு!

பரங்கிப்பேட்டை, அக்.17: இன்ஷாஅல்லாஹ் வருகின்ற 19.10.2014 ஞாயிறு அன்று காலை   10.30 மணிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளையின் பொதுக்குழு TNTJ  மர்கஸில் நடைபெறயிருக்கின்றது.

தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் - பத்திரிக்கை செய்தி!


பரங்கிப்பேட்டை, அக்.17: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளையின் தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம்   பத்திரிக்கை செய்தி.

October 16, 2014

வார சந்தையில் தீவிரவாதப் எதிர்ப்பு பிரச்சாரம்!

பரங்கிப்பேட்டை, அக்.16: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ‪பரங்கிப்பேட்டை‬ கிளை சார்பாக 16.10.2014 அன்று பரங்கிப்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டார கிராமகங்லிருந்து பொதுமக்கள் பெருமளவில் கூடும் வார ‪சந்தையில்‬ ‪திவிரவாத்திற்கு‬ எதிராக ‪முஸ்லிம்களின்‬ தீவிர பிரச்சார துண்டு பிரசுரம் ‪பிறமத‬ சகோதர, சகோதரிகளை சந்தித்து விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!

October 15, 2014

பரங்கிப்பேட்டையில் துவங்கியது தீவிரவாதப் எதிர்ப்பு பிரச்சாரம்...

பரங்கிப்பேட்டை, அக்.15: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமை (இறைவன் நாடினால்) அக்டோபர் 15 2014 முதல் நவம்பர் 15 2014 வரை ஒரு மாத காலம் ‪தீவிரவாத்திற்கு‬ எதிரான ‪முஸ்லிம்களின்‬ தீவிர பிரச்சாரம் அறிவித்துள்ளது.

October 14, 2014

தீவிரவாதத்திற்கு எதிராக ”முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரம்” துண்டு பிரசுரம்!

பரங்கிப்பேட்டை, அக்.14: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ‪‎பரங்கிப்பேட்டை‬ கிளை சார்பாக‪ தீவிரவாதத்திற்கு‬ எதிரான ‪‎முஸ்லிம்களின்‬ தீவிர பிரச்சாரத்தின் முதல் கட்டமாக ”இஸ்லாம் தீவிரவாதத்தைப் போதிக்கின்றதா?” 2000 துண்டு பிரசுரம் அடித்து ‪பிறமத‬ சகோதர, சகோதரிகளுக்கு விநியோகம் செய்யப்படயிருக்கின்றது. இன்ஷாஅல்லாஹ்...

October 12, 2014

”தீவிரவாத எதிப்பு பிரச்சாரம்” சுவர் விளம்பரம்!

பரங்கிப்பேட்டை, அக்.12: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ‪பரங்கிப்பேட்டை‬ கிளையின் சார்பாக 12.10.2014 அன்று “முஸ்லிம்களின் தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம்” சுவர் விளம்பரம் 10-க்கும் மேற்ப்பட்ட இடங்களில் சுவர் விளம்பரம் எழுதப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!

தீவிரவாதப் எதிர்ப்பு பிரச்சாரம் செயல் வீரர்கள் கூட்டம்!

பரங்கிப்பேட்டை, அக்.11: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ‪பரங்கிப்பேட்டை‬ கிளையின் தீவிரவாதத்திற்கு எதிரான முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம் செயல்வீரர்கள் கூட்டம் பரங்கிப்பேட்டை TNTJ மர்கஸில்  11.10.2014 அன்று நடைபெற்றது.

October 06, 2014

கூட்டு குர்பானி -1435 / 2014

பரங்கிப்பேட்டை, அக்.06: அல்லாஹுவின் உதவியால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளை சார்பாக கூட்டு குர்பானி (ஒரு பங்கு ரூபாய்.1600/- மதிப்பில்) ஏற்பாடு செய்யப்பட்டுயிருந்தது.

ஹஜ் பெருநாள் திடல் தொழுகை - 1435 / 2014

பரங்கிப்பேட்டை, அக்.06: அல்லாஹுவின் உதவியால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்‪ கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை‬ கிளையின் ‪ஹஜ்‬ பெருநாள் திடல் தொழுகை 06.10.2014 அன்று கோட்டாதாங்கரை தெரு அலி முஹம்மது கவுஸ் திடலில் சரியாக காலை 7.30 மணியளவில் நடைபெற்றது.

October 05, 2014

அரஃபா நோன்பு இப்தார்!

பரங்கிப்பேட்டை, அக்.05: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை மர்கஸில் 05.10.2014 அன்று அரஃபா நோன்பு இப்தார் ஏற்பாடு செய்யப்பட்டுயிருந்தது. சகோதரர்கள் கலந்துக்கொண்டு பயடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!

October 04, 2014

கருணாநிதி சாலையில் நடைபெற்ற பெண்கள் பயான்!


பரங்கிப்பேட்டை, அக்.04: அல்லாஹுவின் உதவியால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் 04.10.2014 அன்று கருணாநிதி சாலையில் அஸர் முதல் மஃரிப் வரை பெண்கள் பயான் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!

October 03, 2014

நிர்வாக கூட்டம்!

பரங்கிப்பேட்டை, அக்.03: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ‪பரங்கிப்பேட்டை‬ TNTJ மர்கஸில் 03.10.2014 அன்று நிர்வாக மஷீரா நகர தலைவர் சகோ.அமானுதீன் அவர்களின் தலைமையிலும் மாவட்ட துணை செயலாளர் சகோ.ஃபாஜல் ஹுசைன் அவர்களின் முன்னிலையிலும் நடைபெற்றது.

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More