தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

March 08, 2012

உடனடி நடவடிக்கை!!!


பரங்கிப்பேட்டை, மார்ச் 8: டில்லி சாஹிப் வளாகத்தில் நடைபெறும் பால்வாடியில் மின்விசிறி இருந்தும் அதற்கான மின்சார இணைப்பை தர்கா நிர்வாகம் தர மறுத்து வந்தது. 
இதனால் சிறு குழந்தைகள் சாப்பிடும் போது மின்விசிறி போட மின்சார இணைப்பை வழங்கும் மாறும் மற்றும் மோசமான நிலையில் உபயோகபடுத்த முடியாத நிலையில்யுள்ள கழிவறையும் சீர் செய்ய வேண்டும் என அதன் ஆசிரியை நேற்று இஸ்லாமிய தொண்டு நிறுவனத்தால் டில்லி சாஹிப் பகுதியில் கட்டப்பட்டு வரும் வீடுகளை பார்வையிட வந்த பேரூராட்சி தலைவர் முஹம்மது யூனுஸ் அவர்களிடம் கோரிக்கை வைத்தார்.

 
 
 
கோரிக்கையை ஏற்ற பேரூராட்சி தலைவர் உடனடியாக பால்வாடிக்கு மின் இணைப்பு வழங்குமாறு தர்கா நிர்வாகி ஹாஜி அவர்களிடம் தெரிவித்தார். மேலும் கழிவறையும் சீர்செய்து தருவதாக உறுதி அளித்தார்.

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More