தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

March 05, 2012

ஆதார் அட்டை: முஸ்லிம் பெண்களின் முக்காடை கழற்ற சொன்ன அதிகாரிகள் தடுத்து நிறுத்திய TNTJ!

பரங்கிபேட்டை,மார்ச் 5:  பரங்கிப்பேட்டையில் நேற்று (04.02.2012) 8 மற்றும் 9 வது வார்டுகளில் உள்ளவர்களுக்கு ஆதார் அடையாள அட்டை வழங்குவதற்காக புகைப்படம் எடுக்கும் பனி பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள ஒரு அறையில் நடைபெற்றது.ஆண்களும் பெண்களும் புகை படம் எடுக்க ஒரே அறையில் நுழைந்ததால் கூட்ட நெரிசலானது வெகு நேரமாக பெண்களும் வரிசையில் காத்திருக்க, புகைப்படம் எடுக்கும் பெண்மணி அடிகடி சிஸ்டம் ரிப்பேர் என கூறி காக்க வைத்ததால் 8 வது வார்டு கவுன்சிலர் அருள் முருகன் புகைப்படம் எடுக்கும் பெண்ணை சத்தம் போட்டுவிட்டார். அத்தோடு அந்த பெண் போய் விடவே பொதுமக்கள் மிகவும் கஷ்ட்ட பட்டனர் குறிப்பாக பெண்கள். ஒரு பேன் (மின் விசிறி ) கூட இல்லை.


முஸ்லிம் பெண்களை படம் எடுக்கும் போது தலையில் உள்ள முக்காடை கழற்ற சொன்னார்கள் அங்கிருந்த வக்கீல் ஹனிபா இது பற்றி அங்கிருந்தவர்களிடம் விளக்கம் கேட்க இது கவர்மென்ட் ஆர்டர் என கூறி உள்ளனர். அந்த ஆர்டரை காண்பியுங்கள்  என கேட்டபோது திரு திருவென முழித்து முக்காடை எடுத்தால் மட்டுமே புகைப்படம் எடுப்போம் இல்லாவிட்டால் எடுக்க மாட்டோம் என புகைப்படம் எடுக்கும் அந்த பெண் கூறி உள்ளார். 


இந்நிகழ்ச்சியை  புகைப்படம்  எடுத்து இணையதளத்தில் வெளியீட சென்ற நகர TNTJ நகர தலைவர் முத்துராஜா அவர்களிடம் வக்கீல் ஹனிபா இது பற்றி கூறினார். உடனே TNTJ மாநில தலைமையை தொடர்பு கொண்டு கேட்டதற்கு "கண்ணு முகம் காது வரை காட்டுவது தான் சட்டம், நெல்லை மாவட்டத்திலும் இதுபோல்தான் செய்துள்ளனர் பிறகு TNTJ வினர் போய் பிரச்சனை செய்தவுடன் முக்காடை கலட்ட வேண்டாம் காது வரை காட்டினாலே போதும் என கூறி உள்ளனர்.

அவர்களிடம் இதுதான் சட்டம் என கூறுங்கள்  மீறி முக்காடை கழற்ற சொன்னால் பிரச்சனை செய்து எடுக்க விடாதீர்கள் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தன்டனை வாங்கி கொடுப்போம்" என    TNTJ தலைமை நிர்வாகிகள் கூறினார்கள்.

காதுவரை காட்டுவதுதான் சட்டம் மீறி முக்காடை கழற்ற சொன்னால்  பிரச்சனை செய்வோம் என நகர தலைவர் முத்துராஜா அவர்கள் கூறினார் .மற்றும் வக்கீல் ஹனிபாவும்  உங்கள் மீது சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுப்போம் என கூறினார். அதன் பின் சரி சார் முக்காடை கழற்றாமல் காதுவரை காண்பித்தாலே போதும் என கூறினார்கள்.

அதன் பின் இதுபற்றி செய்தி கேள்விப்பட்டு  வந்த பேரூராட்சி மன்ற தலைவர் முஹம்மது யூனுஸ் அவர்கள் முக்காடை கழற்றினால் தான் போட்டோ எடுப்பேன் என கூறியவரை கண்டித்து அவர்களின்  மேல் அதிகாரிக்கு போன் செய்து    இந்த சம்பவம் சம்பந்தமாக புகார் தெரிவித்தார்.


”முக்காடை கழற்றினால் தான் போட்டோ எடுப்பேன் என கூறியதால் வேறு வழியின்றி பல ஆண்கள் மத்த்தியில் முக்காடை கழற்றி போட்டோ எடுத்து விட்டு அசிங்கப்பட்டு ஒரு பெண்மணி யாரும் இதை கேட்க மாட்டிங்களா என கூறி அழுததாக வக்கீல் ஹனிபா நம்மிடம் கூறினார்.  ”

இதனை தொடர்ந்து நாளை முதல் நடக்க இருக்கும் ஆதார் அட்டைக்காக புகைப்படம் எடுக்கும் இடங்களில் TNTJ சார்பாக "காதுவரை காட்டினால் போதும் முக்காடை எடுக்க தேவை  இல்லை" மீறி யாராவது முக்காடை கழற்ற சொன்னால் TNTJ - விடம் தெரிவியுங்கள் என சுவரொட்டி அடித்து ஓட்ட இருக்கின்றோம் என்று நகர தலைவர் முத்துராஜா தெரிவித்துள்ளார்.


இது சம்மந்தமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை TNTJ சார்பாக சுவரொட்டி அடித்து ஒட்டப்பட்டுள்ளது.

5 comments:

விதிமுறைகளை மீறும் இது போன்ற பணியாளர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.நம்முடைய உரிமைகளை பாதுக்காக்க துரிதமாக செயல்ப்பட்ட யூனூஸ் நானா முத்துராஜா மற்றும் வழக்குறிஞர் ஹனிபாவும் பாரட்டுக்குறியவர்கள்.

நஜீர் உபைதுல்லாஹ்

நமதூர் இஸ்லாமிய பெண்களை புகைப்படம் எடுத்து அதை ஒரு செய்தியாக இணையதளத்தில் வெளிஎடுவதற்கு முன்பு அவர்களின் அனுமதியை பெறவும்.

அனுமதி பெறாமல் வெலியிடுவது கண்டிகத்தக்கது.

இது முஸ்லிமாகிய ஒவ்வொருவரின் சிந்தனைக்கு உட்பட்டது.

இவன்: ரியாத் சகோதரர்கள்.

அஸ்ஸலாமு அலைக்கும்,

அதற்காக தானே அவர்களின் முகத்தை மறைத்து வெளியிட்டுயிருக்கிறார்கள்???

ஸலாம்.

இனயதலதில் ஆதார் அட்டைபத்தி வெலியிடுவது தப்பில்லை. பென்கல் முகத்தை மரைத்து வெலியிடுவதர்க்கு பதிலாக, ஆன்கலுடய புகைபடத்தை மரைகாமல் வெலியிடலமெ.

இதுவரை ஆன்கலுடய புகைபடத்தையெ கானமுடியலெ.

ரியாத் ஸகொதரர்கல்...

பெண்களை மைய்யபடுத்தி பிரச்சனை வந்தால்தான் பெண்களின் போட்டோவிற்கு முக்கியத்துவம் (அதிலும் முகத்தை மறைத்துதான் வெளியிட்டுயிருக்கிறார்கள்) கொடுத்துயிருப்பாகள். மேலும் எடுத்த போட்டோகளில் ஆண்களும் சேர்ந்துயிருகிறார்களே?

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More