தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

February 24, 2013

பரங்கிப்பேட்டையில் BSNL பிராட்பேண்ட் சேவை!


பரங்கிப்பேட்டை, பிப்,24: பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் பிராட்பேண்ட் சேவை பரங்கிப்பேட்டை உள்பட 10 ஊர்களுக்கு  விரிவுபடுத்தியுள்ளது.

பரங்கிப்பேட்டை,புவனகிரி, திட்டக்குடி, நெல்லிக்குப்பம், பண்ருட்டி, சங்கராபுரம், சின்னசேலம், ஜெயபுரம், ராகவன்பேட்டை   மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய தொலைபேசி நிலையங்களில் பிராட்பேண்ட் சேவை விரிவு படுத்தப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 20-ம் தேதி முதல் பிஎஸ்என்எல் 2ஜி சிம்கார்டுகள் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த சிம்கார்டுகளை வாடிக்கையாளர் சேவை மையங்களில் மார்ச் 15-ம் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம். 3ஜி டேட்டா கார்டுகள் சலுகை விலையில் வழங்கும் திட்டம் வரும் மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பி.எஸ்.என்.எல் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More