தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

February 23, 2013

கடலூர் மாவட்ட அமீரக TNTJ ஒருங்கிணைப்பு கூட்டம்!


துபை, பிப் 22: அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடலூர் மாவட்ட அமீரக ஒருங்கிணைப்பு கூட்டம் 22.02.2013 அன்று துபை TNTJ தலைமை மர்கசில் பொறுப்பாளர் துபை மண்டல் துனை செயலாளர் மெளலவி.சைய்யது சுல்தான் தலைமையிலும் மற்றும் கடலூர் மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலையில் நடைப்பெற்றது.

முதலில் துவக்க உரை மற்றும் சென்ற தீர்மானங்கள் ஒர் பார்வை ஆகியவற்றை பொறுப்பளார் சகோ.முஹம்மது இஸ்மாயில் அவர்கள் விளக்கி உரை நிகழ்த்தினார்கள்.

அதனை தொடர்ந்து மாவட்டத்தின் செயல்பாடுகளை சகோ.சாதிக் அலி அவர்கள் வாசித்தார்கள்.

அதனை தொடர்ந்து அழைப்பாளர் சகோ.ஃபாஜுல் ஹீசைன் அவர்கள் "தர்மம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

மேலும், தாயகத்திலிருந்து கடலூர் மாவட்ட நிர்வாகிகள் அலைப்பேசி மூலம் மாவட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்களை பற்றி விளக்கினார்கள்.

பின்னர் சகோதரர்களின் ஆலோசனைகளுக்கு பிறகு கூட்டம் இனிதே நிறைவுப்பெற்றது.

இதில் ஏரளமான சகோதரர்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!
 0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More