தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

March 02, 2013

குவைத்தில் சகோ.பிஜே உரை நிகழ்தினார்!

குவைத், மார்ச். 02: குவைத் மண்டல தவ்ஹீத் ஜமாஅத் பொது குழுவும் அதை தொடர்ந்து ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் பொதுக்கூட்ட நிகழ்ச்சியும் நேற்று (01.03.2013) நடைபெற்றது.

சுமார் 800 நபர்கள் மட்டும் கலந்து கொள்ளும் வகையில் ஒரு அரங்கத்தை ஏற்பாடு செய்யப்பட்டு நேற்று வியாழன் இரவில் 11 மணிக்கு மேல் முறையான தகவல் மண்டல நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டு அல்லாஹ்வின் கிருபையால் நேற்று 3.30 மணிக்கு பொது குழு ஆரம்பிக்கப்பட்டது.

பொதுக்குழு உறுப்பினர்களே சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

அதை தொடர்ந்து மாலை 6.00 மணி அளவில் பிஜே அவர்கள் ”இஸ்லாத்திற்கு எதிரான உலகளாவிய சதி” என்ற தலைப்பில் உரை நிகழ்த்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 

ஏற்கனவே பொதுகுழு உறுப்பினர்களால் அரங்கம் நிரம்பி வழிந்தது. பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்ட அரங்கத்தின் முன்பு மக்கள் குவிய தொடங்கினர். 

இந்த கூட்டத்தை அறியாத அரங்க நிர்வாகதினர் எங்களால் சமாளிக்க முடியாது. நீங்கள் இப்போதே இடத்தை காலி செய்து கொள்ளுங்கள் என்று அறிவித்தனர்.


என்ன செய்வது என்று இருந்த நிலையில் அல்லாஹ்வின் அளப்பரிய கிருபை என்பார்களே அது நடந்தேறியது. ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தை விட இரு மடங்கு பெரிய இடம் கிடைக்கப்பட்டு 10 நிமிடத்திற்குள் எந்த வித விளம்பரம் இல்லாமல் ஆண்களும் -ஆண்களுக்கு இணையாக பெண்களும் சாரை சாரையாக மாற்று இடத்தை நோக்கி படை எடுத்தனர்.

அதன் பிறகு மாநில தலைவர் பிஜே அவர்கள் ”இஸ்லாத்திற்கு எதிரான உலகாளவிய சதி” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இது TNTJ WEB TV மூலம் நேரலை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!

அல்லாஹ்வுடைய உதவியும், வெற்றியும் வரும்போதும், 110:2. மேலும், அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் அணியணியாகப் பிரவேசிப்பதை நீங்கள் காணும் போதும்,110:3. உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு (துதித்து) தஸ்பீஹு செய்வீராக; மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக - நிச்சயமாக அவன் “தவ்பாவை” (பாவமன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்பவனாக இருக்கின்றான்.

நன்றி: மேலாப்பாளையம் ஹீசைன்

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More