தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

March 13, 2013

பரங்கிப்பேட்டை கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மையத்தில் கடல் வண்ண மீன் உற்பத்தி பயிற்சி முகாம் தொடக்கம்!

பரங்கிப்பேட்டை, மார்ச்,13:பரங்கிப்பேட்டை கடல்வாழ் உயிரின உயராய்வு மையத்தில் கடல் வண்ணமீன் (க்ளோன் மீன்கள்) உற்பத்தி குறித்த பயிற்சி முகாம் கடந்த (11.03.2013) திங்கள்கிழமை நடைபெற்றது.

அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல்வாழ் உயிரின உயராய்வு மையம் பவளப்பாறை பகுதியில் வளரும் வண்ணமீன்களான கோமாளி மற்றும் டேம்சல் மீன்களை கழிமுகநீரில் உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்பத்தை தயாரித்து, கடலோர கிராம மக்களுக்கு வாழ்வாதாரத்தைப் பெருக்கும் வகையில் பயிற்சி அளித்து வருகிறது.
ஏற்கெனவே இம்மையத்தில் பயிற்சி பெற்றவர்கள் மாதம் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை வருமானம் பெற்று பயனடைந்துள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக தேசிய மீன்வளர்ப்பு அபிவிருத்தி வாரியம் நிதியுதவியுடன் க்ளோன் மீன்கள் உற்பத்தி மற்றும் வளர்ப்புக்கான 5 நாள்கள் பயிற்சி முகாம் பரங்கிப்பேட்டை கடல்வாழ் உயிரின உயராய்வு மையத்தில் திங்கள்கிழமை தொடங்கியது. தூத்துக்குடி அன்பு மனிதம் அறக்கட்டளை சார்பில் 25 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி தொடங்கப்பட்டது.
சிதம்பரம் உதவி ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் முகாமை தொடங்கி வைத்தார். அறிவியல் புல முதல்வர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். தமிழக அரசு மீன்வளத்துறை உதவி இயக்குநர் கருணாகரன் வாழ்த்துரையாற்றினார்.
மைய இயக்குநர் கே.கதிரேசன் வரவேற்றார். பயிற்சி முகாமுக்கான ஏற்பாடுகளை ஆராய்ச்சி அதிகாரி டி.டி.அஜீத்குமார் செய்திருந்தார்.

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More