தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

March 30, 2013

இந்தியர்கள் வேலையிழக்கும் அபாயம்: சவுதி அரேபியாவிடம் மத்திய அரசு கவலை!

மார்ச் 30: சவுதி அரேபிய தொழிலாளர் சட்டத்தால் லட்சக்காணக்கான இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டு அரசிடம் மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது.

சவுதி அரேபியாவில் வேலை வாய்ப்பு இல்லாதவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. கடந்த ஆண்டில் அங்கு மக்கள் தொகையில் 12.2 சதவீதம் பேர், அதாவது 5,88,000 பேர் வேலைவாய்ப்பு இல்லாமல் இருப்பது தெரியவந்தது. இவர்களில் 39 சதவீதத்தினர் 15 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து சொந்த மக்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்கும் வகையில், ”நிதாகத்” என்ற திட்டத்தை சவுதி அரேபிய அரசு தாயரித்துள்ளது. இந்த புதிய தொழிலாளர் சட்டத்தின்படி, ஒவ்வொரு நிறுவனமும், உள்நாட்டு மக்களில் 10 சதவீதம் பேருக்கு கட்டாயம் வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, உள்நாட்டு மக்களை பணியில் சேர்த்துக் கொள்ளாத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சவுதி அரேபிய தொழிலாளர் துறை முடிவு செய்துள்ளது.

தற்போது இந்த பணிகளில் பெரும்பாலும் இந்தியர்கள்தான் உள்ளனர். புதிய சட்டத்தால் இவர்கள் வேலையிழக்கும் நிலையில் உள்ளனர்.

இந்நிலையில், தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பேயில் சென்றுள்ள வெளியுறவுத்துறை இணையமைச்சர் இ.அகமது, அந்நகரில் நடக்கும் மாநாடு ஒன்றில் கலந்துகொள்ள வந்த, சவுதி அரேபிய இளவரசரும், வெளியுறவு துணை அமைச்சருமான அப்துல் அஜிஸ் பின் அப்துல்லா பின் அப்துல் அஜிசை சந்தித்து இந்தியாவின் கவலையை எடுத்துரைத்தார்.

இதைக் கேட்டுக்கொண்ட சவுதி இளவரசர், இந்தியாவுடன் நல்ல நட்புறவு நீடித்து வரும் நிலையில், தற்போது பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சவுதி அரேபிய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று உறுதி அளித்தார்.

2 comments:

எனது வாப்பாவை வேலையில் இருந்து விலக சொல்லி நேற்று நிர்வாகத்தினர் உத்தரவிட்டுள்ளனர்....அவர் செய்யும் பணி அரபிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோ.அப்துல் ரஹ்மான்,

கவலைபடாதீர்கள்... ரிஜ்கை கொடுப்பவன் அல்லாஹ்!

துஆ செய்யுங்கள்... அல்லாஹ் இதைவிட மேலானதை உங்கள் வாப்பாவிற்கு வழங்குவான்... இன்ஷாஅல்லாஹ்!

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More