தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

March 03, 2013

பரங்கிப்பேட்டை அருகே வழிப்பறி கொள்ளையர்கள் கைது!

பரங்கிப்பேட்டை, மார்ச் 3:  பரங்கிப்பேட்டை காவல் சரகத்திற்குட்பட்ட  பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட இரு இளைஞர்கள் காவல்துறையினரிடம் பிடிப்பட்டனர். கைது செய்யப்பட்ட அவர்களிடமிருந்து சுமார் 16 பவுன் நகைகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.


கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை காவல் சரக பகுதிக்குட்பட்ட பி.முட்லூர், கொத்தட்டை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இரு சக்கர வாகனங்களில் செல்வோரை பின் தொடர்ந்து வழிமறித்து வழிப்பறி சம்பவங்கள் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தொடர்ச்சியாக புகார்கள் வந்ததின் அடிப்படையில் பரங்கிப்பேட்டை காவல் துறை ஆய்வாளர் கலீமுல்லாஹ் ஷா  தலைமையில் காவல்துறையினர் பரங்கிப்பேட்டை அருகே இருக்கும் சம்மந்தம் எனும் இடத்தில் நேற்று முன் தினம் சுற்றுக்காவல் பணி மேற்கொண்டிருந்தனர்.அப்போது இரு சக்கர வாகனம் ஒன்றில் வந்த பி.முட்லூர் அங்காளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ஜெகதீசன் (வயது 23), மஞ்சக்குழியைச் சேர்ந்த கார்த்திக் (வயது 23), ஆகிய இரு இளைஞர்களை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில்,  இருவரும் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களை பின்தொடர்ந்து சென்று மறித்து தாக்கி வழிப்பறி செய்தது தெரியவந்தது.

காவல்துறையினர் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் கொத்தட்டையில்  தனசேகரன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் இரு சக்கர வாகனத்தில் புதுச்சேரிக்கு சென்று கொண்டிருந்த போது பின் தொடர்ந்து சென்று தனசேகரனின் மனைவியிடம் 9 பவுன் சங்கிலியைப் பறித்துச் சென்றது தெரியவந்தது.

சிதம்பரம் உமையாள்சந்தில் வசிக்கும் ராஜலட்சுமி என்பவரிடம்  குடிக்க தண்ணீர் கேட்டு வீட்டுக்குள் புகுந்து 7 பவுன் நகைகளை இவர்கள் இருவரும் திருடிச் சென்றதும் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட இருவரிடமும் பரங்கிப்பேட்டை காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More