தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

March 18, 2013

இந்தியர்கள் இனி குடியேற்ற படிவம் நிரப்ப தேவையில்லை!

புது தில்லி, மார்ச்,18 : இந்தியாவிலிருந்து வெளிநாட்டுக்கு விமானம் மூலம் செல்லும் பயணிகள் எரிச்சலாக கருதும் விஷயங்களில் ஒன்றான குடியேற்ற படிவம் நிரப்புதல் சீக்கிரம் முடிவுக்கு வரும் என தெரிய வந்துள்ளது.சாதாரணமாக இந்தியாவிலிருந்து வெளிநாடு செல்பவர்கள் தங்கள் பொருட்களை எடை போடும் போதே குடியேற்ற படிவம் கொடுக்கப்படும். அதில் தங்கள் கடவுசீட்டு விபரம், செல்லும் இடம், விமான விபரங்கள் முதலியவை நிரப்பப்பட வேண்டும்.

இது அனைவருக்கும் ஒரு எரிச்சலூட்டும் நடைமுறை என்பதோடு வளைகுடாவிற்கு தொழிலாளர்களாக செல்லும் பலர் இப்படிவத்தை நிரப்ப பிறரை நாட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவர். சிலர் போதிய படிப்பறிவின்மையால் தவறாக தகவல் எழுதுவர்.

இக்குளறுபடிகளை நீக்கும் பொருட்டும், இதனால் விமான நிலையங்களில் ஏற்படும் கால தாமதத்தை தவிர்க்கும் பொருட்டும் இத்தகவல்கள் டேட்டா பேஸிலிருந்து பெறப்பட்டு மின்னஞ்சல் வழியாக அனுப்பப்படும் திட்டம் தொடங்கப்பட உள்ளது.

இத்திட்டத்தின் படி விமானம் கிளம்பிய 15 நிமிடத்திற்குள் அவ்விமானம் செல்லும் விமான நிலையத்திற்கு இத்தகவல்கள் அனுப்பி வைக்கப்படும். மேலும் இத்தகவல்கள் முன்னரே விரைவாக அனுப்பப்படுவதால் சந்தேகத்துக்குரியவர்கள் குடியேற்ற அதிகாரிகளால் எளிதாக அடையாளம் காணப்பட்டு விசாரிக்கப்படுவர்.

இத்திட்டத்துக்கான எல்லா ஏற்பாடுகளும் முடிந்து விட்டதாகவும் மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் அமுல்படுத்தப்படும் என்றும் தேசிய தகவல் மைய தலைவர் ஷெட்டி கூறினார். இவ்வாண்டு செப்டம்பர் மாத வாக்கில் இத்திட்டம் அமுலாக்கப்படும் சாத்தியம் உள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

SOURCE: இந்நேரம்.காம்

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More