தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

April 16, 2013

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் இனி அரசின் வசம்!


சிதம்பரம்,ஏப்.16: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தை அரசு ஏற்கும், சட்ட திருத்த மசோதா, சட்டசபையில் 14.04.2013 அன்று அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம், பல்கலை நிர்வாகத்தை, ஒட்டு மொத்தமாக,அரசு தன் வசம் கொண்டு வருகிறது. இதற்கு ஏற்ப, சட்ட திருத்த மசோதாவில், வழி வகை செய்யப்பட்டுள்ளது.


சிதம்பரம், அண்ணாமலை பல்கலையில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக, ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கைக் குழு மற்றும் மாணவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர். இந்த நிலையில், பல்கலையின், வரவு - செலவு மற்றும் நிர்வாகச் செயல்பாடுகளை, அரசின் தணிக்கைக் குழு ஆய்வு செய்தது."பல்கலையில் முறைகேடுகள் நடந்துள்ளது' என, தணிக்கைக் குழு, அரசுக்கு அறிக்கையை அளித்தது. 

இதைத் தொடர்ந்து, பல்கலைக் கழகத்துக்கு, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிவ்தாஸ் மீனாவை, சிறப்பு அலுவலராக, தமிழக அரசு நியமித்தது. மேலும், முறைகேடுகளுக்கு காரணமாக இருந்ததாக, அண்ணாமலை பல்கலையின் துணைவேந்தர் ராமநாதனை, கவர்னர், "சஸ்பெண்ட்' செய்தார்.

இந்த நிலையில், அண்ணாமலை பல்கலையை அரசு ஏற்க, சட்டசபையில் 14.04.2013 அன்று சட்ட திருத்த மசோதாவை அறிமுகம் செய்தது. உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன்  மசோதாவை தாக்கல் செய்தார்.

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More