தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

April 15, 2013

கடல்பாசி மிகச் சிறந்த ஊட்டச்சத்து உணவு: ஆய்வில் நிரூபணம்! பரங்கிப்பேட்டை சேவா மந்திர் பள்ளி பிள்ளைகளுக்கு கொடுத்து சோதனை!

பரங்கிப்பேட்டை, ஏப்.15: கடல்பாசி (Spirulina) உணவு மிகச் சிறந்த ஊட்டச்சத்து உணவு என உலக சுகாதார அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.
3 கிராம் கடல்பாசியில் ஒரு கிலோ காய்கறி மற்றும் பழங்களின் அனைத்து சத்துகளும் நிறைந்துள்ளன என சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி குழந்தை நல மருத்துவர் பேராசிரியர் எஸ்.ரமேஷ் தெரிவித்துள்ளார்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் மருத்துவ அறிவியல் கழகம், வசுபால் கிரியேஷன்ஸ் மக்கள் நலவாழ்வு சங்கம் மற்றும் இந்திய மருத்துவக் கழகம் ஆகியன இணைந்து நடத்திய கடல்பாசி மூலம் குழந்தைகள் வளர்ச்சி மற்றும் உயிரிவேதியியல் பண்புகள் முன்னேற்றம் குறித்த அறிவியல் ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பல்கலைக்கழக மருத்துவப்புல முதல்வர் டாக்டர் என்.சிதம்பரம் தலைமை வகித்தார். மருத்துவ அறிவியல் கழகச் செயலர் ஜே.கபாலிமூர்த்தி வரவேற்றார். டாக்டர் கே.என்.வசுபாலய்யா, டாக்டர் ரத்தினா வசுபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மலேசியா நாட்டின் டிஎக்ஸ்என் நிறுவனத் தலைவர் டாக்டர் லிம்சியோ ஜின் பேசினார்.
ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி குழந்தை நல மருத்துவத் துறைத் தலைவர் டாக்டர் எஸ்.ரமேஷ், பேசியது:
பரங்கிப்பேட்டை சேவா மந்திர் பள்ளியில் 150 குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டு, கடல்பாசி உணவு ஒரு ஆண்டு காலம் அளிக்கப்பட்டு, மீண்டும் அந்த குழந்தைகளுக்குப் பரிசோதனை செய்யப்பட்டது.
அப்போது அக்குழந்தைகளுக்கு ஹீமோகுளோபின் வளர்ச்சி, புரோட்டீன், வைட்டமின், தாதுக்கள் ஆகியவற்றின் அளவு வளர்ச்சியடைந்துள்ளது, தெரியவந்துள்ளது. கடல்பாசி (ஸ்பைரூலினா) உணவு, ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்கி, முழு ஊட்டச்சத்தை உடலுக்கு வழங்குகிறது.
இதை மலேசியாவைச் சேர்ந்த டி.எக்ஸ்.என்.  என்ற நிறுவனம் தயாரித்து உலகெங்கும் வழங்குகிறது என டாக்டர் எஸ்.ரமேஷ் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் இந்திய மருத்துவக் கழக சிதம்பரம் கிளைத் தலைவர் டாக்டர் ஆர்.பாஸ்கரன், டாக்டர் செல்வமுத்துக்குமரன், டாக்டர் பாலசந்தர், டி.எக்ஸ்.என். உறுப்பினர் ஷேக்மொய்தீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக் கண்காணிப்பாளர் டாக்டர் எம்.மணிவாசகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More