தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

April 17, 2013

மீன்பிடி தடைக்காலம்: பரங்கிப்பேட்டை பகுதியில் படகுகள் கரையோரம் நிறுத்தம்!

பரங்கிப்பேட்டை, ஏப்17 : மீன்பிடி தடைக்காலம் துவங்கியதால் பரங்கிப்பேட்டை பகுதி மீனவர்கள், படகுகளை பழுதுபார்த்தல் மற்றும் வலைகளை சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடலில் மீன் இனப்பெருக்கத்தையொட்டி, ஏப்ரல் 15ம் தேதி முதல் 45 நாட்களுக்கு கடலில் மீன் பிடிக்க தடை செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் முதல் தடைக்காலம் அமலுக்கு வந்தது. 


பரங்கிப்பேட்டை கடற்கரை கிராமங்களான புதுக்குப்பம், புதுப்பேட்டை, சின்னூர், சாமியார்பேட்டை உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மீனவர்கள், படகுகளை அன்னங்கோவில் வெள்ளாற்று கரையோரம் நிறுத்தி வைத்துள்ளனர்.மேலும், தற்போது படகுகளை பழுதுபார்த்தல் மற்றும் வலைகளை சீரமைக்கும் பணியில் மீனவவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

பரங்கிப்பேட்டை மீன் பிரியர்களுக்கு கொஞ்சம் சிரமம்தான்...

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More