தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

April 10, 2013

வளைகுடா நாடுகளில் நில அதிர்வு!

துபை, ஏப்.10: நேற்றைய தினம் தெற்கு ஈரானில் பிற்பகல் சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.3 பதிவுயாகியுள்ளது. இதனுடைய தாக்கம் வளைகுடா நாடுகளான ஜக்கிய அரபு அமீரகத்தின் பகுதிகளான துபை, அபுதாபி, ஷார்ஜா, மற்றும் குவைத், சவுதி, கத்தார் மற்றும் பஹைரன் போன்ற நாடுகளிலும் உணரப்பட்டது.

இதனால் துபையில் பிற்பகல் 4.00 மணியளவில்  ஷேக் ஜாயித்து ரோடு, ஜுமைரா லேக் டவர், ஜபல் அலி போன்ற இடங்களில் அலுவலகத்தில் பணியிருந்தவர்கள் நில அதிர்வின் காரணமாக வெளியில் வந்துவிட்டார்கள். மற்றும் அபுதாபி போன்ற இடங்களிலும் மக்கள் தங்களுடைய இருப்பிடங்களை விட்டு வெளியில் வந்துவிட்டார்கள்.அல்லாஹ்வின் எச்சரிக்கை!

ஒவ்வொரு வருடமும் ஒரு தடவையோ, இரண்டு தடவைகளோ தாங்கள் சோதிக்கப்படுவதை அவர்கள் உணர மாட்டார்களா? பின்னரும் அவர்கள் திருந்திக் கொள்ளவில்லை. படிப்பினை பெறுவதுமில்லை.  

[திருக்குர்ஆன் 9:126]

வானத்தில் உள்ளவன் பூமியில் உங்களைப் புதையச் செய்வதில் பயமற்று இருக்கிறீர்களா? அப்போது (பூமி) நடுங்கும். 

[திருக்குர்ஆன் 67:16]

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More