தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

April 18, 2013

கொள்கை கூட்டமே கொட்ட விழித்து நீ பணி செய்...!


ஏப்.18: துளியூரிலிருந்து கருவூர் பயணித்த களைப்பில் நான் அயர்ந்திருந்தேன். அயர்ந்த காலத்தே அங்கமதை  அழகு செய்த அல்லாஹ்விற்கே புகழனைத்தும்.

துளியூரிலிருந்து கருவூர் பயணித்த
களைப்பில் நான் அயர்ந்திருந்தேன்.
அயர்ந்த காலத்தே அங்கமதை

அழகுசெய்த அல்லாஹ்விற்கே புகழனைத்தும்.


அழகனை மூடிவைக்க அவனுக்கு
ஆசையில்லை அற்புதமாய் வெளிக் கொனர்ந்தான்.

அசிங்கமாய் தோன்றியது அகிலமது
அழுதுவிட்டேன் - என் செய்வேன்?!

அப்துல் காதிர் ஜெய்லானி
அருளாலே பிறந்திட்டானென பிதற்றிட்டார்!
அவனது அருள் மறந்து.
அறிவிலிகாள் அய்யகோ என்சொல்வேன்!.

கபுர் முட்டிமுட்டிச் சாவார்-இவர்
முட்டாத கபுரில்லை உலகினிலே.
குரங்கு,யானை, பாம்பென கும்பிட்டு
கூத்தடிக்கும் முட்டாள் கூட்டமிவர்.

எச்சில் ஒழுக ஏய்ப்பவனும்
கக்கிக் கொடுக்கும் வெற்றிலையை
எப்படித்தான் வெக்கமின்றி நக்குகின்றார்.
நக்கிப் பிழைக்கும் நாயினமா?!

கொட்டிக் கொடுக்கின்றார் கொடியோர்
வட்டிக் காசுதனை கொடியேற்றமென்று
எட்டிக் கிடக்கும் எம்மினத்து
ஏழை முகம் பாரார்.

அவ்லியா என்பார்,ஷேஹ் என்பார்,அப்பா என்பார்
தந்தைக்கும் தாயுக்கும் தகுதி போற்றார்.
அறிவிழந்து பொருளிழந்து அறம் கொல்வார்.
ஆனாலும், இசுலாமியன் என்றுரைப்பார்.

முத்தவல்லி என்று சொல்வார்
மொத்தமான வயிறு தள்ளி நிற்பார்.
முகமதனை மொத்தமாக வளித்து நிற்பார்.
முஹமதின்(ஸல் உம்மத் என்பார்.

நெஞ்சில் அச்சமில்லை நரக
நெருப்பதற்கு கடும் பயமுமில்லை
இவர் கஞ்சித் திருடரவர்
காட்டி வைத்தார் மார்க்கமென.

அருள் மறையை தூரமாக்கி
அன்பு திருநபி வழியை பாரமாக்கி
மதஹப் என்றார்- மடமை தனை
மார்க்கமென இவர் சொல்லிட்டார்.

ரொட்டி திங்கும் ரோசமிலாக்
கூட்டமிவர்- வட்டிக் கடைக்கும்
பாத்திஹா ஓதி வசூல் செய்திட்டார்.
பாதகர் பாரினிலே பரவிக் கிடக்கின்றார்.

சந்தனமென்பார், உரூஸென்பார், கந்தூரியென்பார்
சாக்கடையில் இவர் வீழ்திட்டார்.
வஞ்க போலி மௌலவி
வலைதனிலே வசமாக மாட்டிட்டார்.

கச்சேரி வைத்து,கரகாட்டம் ஆடி
கன்னியரின் கூட்டம் காண
கம்பதனைச் சுற்றி வீரம்
கட்டிட்டார் வெட்டிக் கூட்டத்தார்.

கொல்லைக் கூட்டமதை கொல்லை
கொள்ளும் வரை கொள்கை கூட்டமே
கொட்ட விழித்துநீ பணிசெய்.
மெள்ள இனிச் சாவார்.

- முனீப் அபுஇக்ராம்

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More