தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

April 04, 2013

பரங்கிப்பேட்டை வெள்ளாற்றில் பழுதாகி நிற்கும் டிரஜ்ஜரை அகற்ற கோரிக்கை!

பரங்கிப்பேட்டை,ஏப் 04: பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் வெள்ளாற்றில் பழுதாகி நிற்கும் டிரஜ்ஜர் இயந்திரத்தில் கடலில் மீன் பிடித்துவரும் படகுகள் அடிக்கடி மோதி சேதமாகவதால், டிரஜ்ஜரை அகற்ற மீன் வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பரங்கிப்பேட்டை அன்னங்கோவிலில் மீன் இறங்குதளம் அமைப்பதற்காக வெள்ளாற்றில் டிரஜ்ஜர் இயந்திரம் மூலம் தூர்வாரப்பட்டது. நான்கு மாதங்களுக்கு முன் டிரஜ்ஜர் திடீரென பழுதானது. இதனால் டிரஜ்ஜர் அன்னங்கோவில் கடற்கரையோரம் நிறுத்தப்பட்டுள்ளது.


மீனவர்கள் படகில் கடலுக்கு சென்று மீன் பிடித்து முகத்துவாரம் வழியாக பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் கரைக்கு திரும்பி வரும் போது படகுகள் வேகத்தை திடீரென குறைக்க முடியாததால் மீனவர்களின் படகுகள் அடிக்கடி டிரஜ்ஜர் மீது மோதிவிடுகிறது. இதனால் படகுகள் சேதமடைவதோடு, மீனவர்கள் கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர்.

எனவே வெள்ளாற்றில் நான்கு மாதங்களாக பழுதாகி நிற்கும் டிரஜ்ஜர் இயந்திரத்தை அகற்ற மீன்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More