தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

April 02, 2013

சவூதி சகோதரர்களின் கவணத்திற்கு!

ரியாத், ஏப்ரல், 02: சவூதியில் வேலை செய்யும் (பாஸ்போர்ட் இல்லாத அல்லது ஸ்பான்ஸரிடம் பாஸ்போர்ட் மாட்டிக் கொண்ட) இந்தியர்கள், கம்பெனி அல்லது ஸ்பான்ஸர் பிரச்சனைகளால் தாயகம் செல்ல விரும்பினால், உடனடியாக இந்திய தூதரக அலுவலகங்களை தொடர்பு கொண்டு, ”எமெர்ஜென்ஸி டிராவல் சர்டிபிகேட்டுக்கு" விண்ணப்பிக்கலாம்.

ஆனால், பொது மன்னிப்பு குறித்த சவூதி அரசாங்கத்தின் அறிவிப்புக்குப் பிறகே, "அவுட் பாஸ்" வழங்கப்படும். கடைசி நேர பதற்றத்தை தவிர்ப்பதற்காக இந்த ஏற்பாடு. மேலும், ஜவஸாத் மூலம் "எக்ஸிட்" ஃபார்மாலிட்டிகளை முடித்த பின்னரே அவுட் பாஸினை எம்பஸி வழங்கும்.

கையில் பாஸ்போர்ட் உள்ளவர்கள், அவுட்பாஸுக்காக எம்பஸி வரத் தேவையில்லை. பொது மன்னிப்பு அமுல்படுத்தப்பட்ட பின்னர் அவர்கள் எக்ஸிட் அடித்து செல்லலாம்.


நன்றி: Faisal Mohamed

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More