தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

May 22, 2013

பரங்கிப்பேட்டை TNTJ: கோடைக்கால பயிற்சி முகாம் பரிசளிப்பு!

பரங்கிப்பேட்டை, மே.22: அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளையின் கோடைக்கால பயிற்சி முகாம் கடந்த 11.05.2013 முதல் 20.05.2013 வரை நடைபெற்றது.


இதில் சுமார் 30 மாணவர்கள் கலந்துகொண்டனர். இவர்களுக்கு அனைவருக்கும் கேள்விதாள் தயார் செய்து தேர்வு 19.05.2013 மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளியில் நடைபெற்றது.


இதில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி 20.05.2013 அன்று கிளை தலைவர் சகோ.பாஷா தலைமையிலும் அமீரக கடலூர் மாவட்ட பொறுப்பாளர் சகோ.முஹம்மது இஸ்மாயில் மற்றும் சகோ.ஃபாஜுல் ஹுசைன் முன்னிலையில் நடைபெற்றது.

தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முறையே முதல் பரிசு, இரண்டாம் பரிசு மற்றும் மூன்றாம் பரிசு என்று வழங்கப்பட்டது. மேலும் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் TNTJ மாநில தலைமையின் சான்றிதழ் மற்றும் மனனம் செய்வோம், துஆக்களின் தொகுப்பு ஆகிய புத்தங்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்மதுலில்லாஹ்!  0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More