தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

June 16, 2013

எழுச்சியுடன் நடைபெற்ற "ஏகத்துவ எழுச்சி பொதுக்கூட்டம்"

பரங்கிப்பேட்டை, ஜுன் 16: அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் பரங்கிப்பேட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளை சார்பில் 15.06.2013 (சனிக்கிழமை) அன்று நடைபெற்ற "மாபெரும் ஏகத்துவ எழுச்சி (மாநாடு) பொதுக்கூட்டம்" எழுச்சியுடன் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!


மஃரிப் தொழுகைக்கு பிறகு 7.00 மணிக்கு ஆரபிக்கப்படயிருந்த பொதுக்கூட்டம்  மழையின் காரணமாக சிறிது தாமதமாக ஆரபிக்கப்பட்டாலும் மழையை கூட பொருட்படுத்தாமல் முதலில் பெண்கள் கூட்டம் சாரை சாரையாக வந்தணர். பின்னர் நற்காலி முழுவதும் பெண்களே ஆக்ரமித்தனர். ஆண்கள் கூட்டம் பின் தல்லப்பட்டு அவர்களும் பார்க்க இலகுவாக "LED TV" டிவிக்கள் கனிசமாக பொருதப்பட்டது.

நற்காலி இடமல்லாமல் தெருவின் இரு பக்கமும்யுள்ள வீட்டுகளின் பெரிய தின்ணைகளில் நூற்றுக்கணாக்கனோர் அமர்ந்துயிருந்தனர். 

முதலில் தலைமையுரையாக மாவட்ட தலைவர் சகோ.அப்துர் ரஜ்ஜாக் அவர்கள் உரையாற்றினார்கள்.

தொடர்ந்து மேல்ப்பட்டாம்பாக்கத்தை சேர்ந்த சிறுவன் அப்துல்லாஹ் "மறுமை சிந்தனை" என்ற தலைப்பில் சிறிது நேரம் உரை நிகழ்த்தினார்.

அதனையெடுத்து செயலாளர் சகோ.E.முஹம்மது அவர்கள் "தவ்ஹீத் ஜமாஅத்தின் அரும்பணிகள்" என்ற தலைப்பில் உரை நிகத்தினார்கள். இதில் தவ்ஹீத் ஜமாஅத் செய்துவரும் மார்க்க மற்றும் சமுதாய சேவைகளை நடைமுறை எடுத்துகாட்டுகளுடன் உரையாற்றினார்.பின்னர், மாநில பொதுச்செயலாளர் சகோ.கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் "தவ்ஹீத் கொள்கை" என்றால் என்ன? தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார்கள்.

கிளை பொருளாளர் சகோ.பாஷா அவர்கள் பொதுக்கூட்டத்தின் தீர்மானங்களை வாசித்தார்.

தீர்மானங்கள்:-
  • தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு உள்ள 3.5 சதவீத இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்தினால் வருகின்ற நாடளுமண்ற தேர்தலில் முஸ்லிம்களின் வாக்கு அதிமுக-விற்க்கே என்று இப்பொதுக்கூட்டம் அறிவிக்கின்றது.
  • பரங்கிப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முஸ்லிம் பெண்களின் மார்க்க கடமையான முக்காடு (ஹிஜாப்) அணிவதற்கு உடனே தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று இப்பொதுக்கூட்டம் கேட்டுகொள்கின்றது.
  • பேருந்து நிலையும் மற்றும் வழிபாட்டு தளங்கள் அமைந்துள்ள இடத்தில் இருக்கும் டாஸ்மாக் கடையை உடனே அகற்றும்மாறு இப்பொக்கூட்டம் கேட்டுக்கொள்கின்றது.
  • கடலூர் O.T. பஸ் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பேருந்து நிறுத்தில் நிறுத்தாமல் செல்வதால் மாணவர்கள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். ஆகையால் போக்குவரத்துறை உடனே நடவடிக்கை எடுக்கமாறு இப்பொதுக்கூட்டம் கேட்டுக்கொள்கின்றது.
  • சின்னதெரு முனையில் கட்டப்பட்டு வரும் சாக்கடை கால்வாயால் போக்குவரத்து மிகவும் சிரமாகயுள்ளது. இதனை கவணத்தில் கொண்டு கால்வாய் பணியை விரைந்து முடிக்ககுமாறு பேரூராட்சியை இப்பொதுக்கூட்டம் கேட்டுகொள்கின்றது.
  • 25 வருடகளாக வசூல் செய்துவரும் பெரிய மதகு பாலம் வசூலை ரத்து செய்யும்மாறு பேரூராட்சியை இப்பொதுக்கூட்டம் கேட்டுக்கொள்கின்றது.
  • TNTJ வழங்கும் "இதுதான் இஸ்லாம்" நிகழ்ச்சி மெகா 24 சேனலில் தினமும் இரவு 10 முதல் 11 மணி வரை ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதனை பொதுமக்கள் பார்த்து பயடையும் வகையில் மெகா 24 சேலை உடனடியாக பரங்கிப்பேட்டை பகுதியில் ஒளிபரப்புமாறு கேபிள் டிவி ஆப்ரோட்டர்களை இப்பொதுக்கூட்டம் கேட்டுகொள்கின்றது.
  • நம் கண்முன்னே வாழ்ந்து மரணித்த ஒருவருக்கு கொடியேற்றுதல், சந்தணம் பூசுதல் மற்றும் கந்தூரி விழா எடுத்தல் போன்ற ஷிர்க்கான காரியத்தை இப்பொதுக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.
பின்னர் அமீரக கடலூர் மாவட்ட மண்டல பொறுப்பாளர் சகோ.முஹம்மது இஸ்மாயில் அவர்களின் நன்றியுரையுடன் பொதுக்கூட்டம் நிறைவுப்பெற்றது.

பொதுக்கூட்டத்திற்கு வரும் மக்களின் சிந்தனையயை தூண்டும் விதமாக இருபுறமும் சமூக தீமைகளான மது, புகையிலைகளுக்கு எதிராகவும், வரதட்சனை மற்றும் சிந்திக்க தூண்டும் குர்ஆன் மற்றும் ஹதீஸ்கள் அடங்கிய பேணர்கள் வைப்பட்டுயிருந்தது. இது வந்திருந்த மக்களை வெகுவாக கவர்யிருந்தது. அல்ஹம்துலில்லாஹ்!

பொதுக்கூட்டத்தில் மார்க்க அறிவை பெருக்கும் விதமாக மார்க்க அறிஞர்கள் உரை நிகழ்த்திய சிடிக்கள், புத்தங்கள் மற்றும் குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடங்கிய ஸ்டிக்கர்கள் விற்பனை செய்யப்பட்டது.

வெளியூர் சகோதரர்களுக்காக சலுகை விலை உணவுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுயிருந்தது.

இந்த பொதுக்கூட்டத்திற்க்காக இரவு பகல் பாரமல் உழைத்த சகோதரர்களுக்கும், பொருளாதார உதவி செய்த உள்ளூர் மற்றும் வெளிநாடு வாழ் சகோதரர்கள் அனைவருக்கும் பரங்கிப்பேட்டை TNTJ சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கின்றோம். (ஜஸாக்கல்லாஹீ கைரன்)

எல்லாம் புகழும் நம்மை படைத்த அல்லாஹ் ஒருவனுக்கே!

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More