தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

July 16, 2013

பரங்கிப்பேட்டையில் ரயில்கள் நின்று செல்ல கோரிக்கை!

பரங்கிப்பேட்டை, ஜுலை.16: கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை நகராட்சியில் (எப்போது நகராட்சியாக மாறியது என்று தெரியவில்லை?) சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இஸ்லாமியர்கள் பெருமளவில் வசிக்கும் இந்த பகுதியில் மக்கள் சென்னை போன்ற பெரு நகரங்களுக்கு சென்று வருவார்கள். 


ஒரு காலத்தில் பரங்கிப்பேட்டையில் பெரிய தொழிற்சாலைகள் இருந்தது. அதன் மூலம் உற்பத்தி பொருள்கள் படகுகள் வழியாக சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகி உள்ளது.


ஆனால் தற்போது அங்கிருந்து நேரடியாக சென்னை போன்ற நகரங்களுக்கு போக்குவரத்து வசதி இல்லை. கடலூர் அல்லது சிதம்பரத்திற்கு சென்று பின்னர் வேறு நகரங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில் சிதம்பரத்திலிருந்து பரங்கிப்பேட்டை வழியாக சென்னைக்கு ஒரு பஸ் இரவு நேரத்தில் இயக்கப்பட்டது. ஆனால் நாளடைவில் அந்த பஸ் சரியாக பரங்கிப்பேட்டைக்கு செல்வதில்லை. 

இந்நிலையில் ரயில் போக்கு வரத்திலும் பரங்கிப்பேட்டை புறக்கணிக்கப்பட்டு உள்ளது. விழுப்புரம்-மயிலாடுதுறை வழித்தடத்தில், கடலூர்-சிதம்பரம் இடையே பரங்கிப்பேட்டை ரயில் நிலையம் உள்ளது. சென்னை, ராமேஸ்வரம், காரைக்கால், மன்னார்குடி, திருப்பதி, மதுரை, திருச்செந்தூர், திருச்சி போன்ற பல்வேறு பகுதிகளுக்கு இந்த வழியாக ரயில்கள் செல்கிறது. ஆனால் எந்த ரயிலும் பரங்கிப்பேட்டையில் நிற்பதில்லை. 

வெளியூர்களுக்கு ரயிலில் செல்பவர்கள் சிதம்பரத்திற்கோ அல்லது கடலூருக்கோ சென்றுதான் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. மேலும் இரவு நேரத்தில் சென்னை, மயிலாடுதுறை மார்க்கங்களில் இயக்கப்படும் 4 எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஏதாவது ஒரு ரயிலை மட்டுமாவது பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


தினகரன் - 16.07.2013

photo: mypno

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More