தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

July 29, 2013

லைலத்துல் கத்ரில் சொல்ல வேண்டிய துஆ! (கடைசி பத்தின் ஒற்றைப்படை இரவுகளில்)

ஜுலை.29: லைலத்துல் கத்ரில் சொல்ல வேண்டிய துஆ: (ரமலான் கடைசி பத்தின் ஒற்றைப்படை இரவுகளில்...)

"அல்லாஹ்வின் தூதரே! லைலத்துல் கத்ரு எந்த இரவு என்று நான் அறிய நேர்ந்தால் அந்த இரவில் என்ன சொல்ல வேண்டும்'' என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள் பின்வருமாறு கற்றுத் தந்தார்கள்.

அல்லாஹும்ம இன்னக்க அஃபுவ்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஅஃபு அன்னீ 


பொருள்: யா அல்லாஹ்! நீ மன்னிக்கக் கூடியவன். மன்னிப்பை விரும்புபவன். என்னை மன்னித்து விடு! அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : திர்மிதீ 3435 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் லைலத்துல் கத்ரில் செய்வதெற்கென பிரத்தியேகமாகக் கற்றுத் தந்த ஒரு வணக்கம் உண்டென்றால் அது இந்த துஆ தான். எனவே இந்த துஆவை பிந்திய பத்து இரவுகளில் (குறிப்பாக ஒற்றைப்படை இரவுகளில்) அதிகமாகச் செய்ய வேண்டும். 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காட்டித் தந்த முறைப்படி, அந்த இரவுகளில் நின்று வணங்கி ஆயிரம் மாதங்களை விட மேன்மையான அந்த லைலத்துல் கத்ரை அடைவோமாக!

Courtesy: www.onlinepj.com

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More