தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

July 24, 2013

கடலூர் சிப்காட் அருகே அரசு பேருந்து விபத்து: பரங்கிப்பேட்டையை சேர்ந்தவர் படுகாயம்!

கடலூர், ஜுலை.24: கடலூர் முதுநகர் அருகே நின்றிருந்த லாரி மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 20 பேர் படுகாயமடைந்தனர். சிதம்பரத்திலிருந்து கடலூர் நோக்கி டி.என்.32 என் 3165 எண்ணுள்ள 155 ஏ வழித்தடம் கொண்ட அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. 


பஸ்சை வரகால்பட்டைச் சேர்ந்த டிரைவர் சுந்தரம் ஓட்டி வந்தார். பஸ் சிப்காட் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அருகே வந்தபோது. எதிரே வந்த வாகனத்தின் மீது மோதாமல் இருக்க டிரைவர் பஸ்சை இடது புறம் திருப்பினார். அதில், எதிர்பாராத விதமாக எதிரே சாலையோரத்தில் ஐஸ் ஏற்றுவதற்காக நின்றிருந்த டி.என்.04 ஒய் 6444 என்ற எண்ணுள்ள மீன் லாரி மீது பஸ் மோதியது. 

இந்த விபத்தில் வாழப்பட்டைச் சேர்ந்த பஸ் கண்டக்டர் முருகையன், 50, பரங்கிப்பேட்டை அப்துல் காதர், 65, வண்டிப்பாளையம் ஜெயராமன், 60, வீரம்மாள், 53, உட்பட 20 பேர் படுகாயமடைந்தனர். 

உடன், அனைவரும் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


இந்த விபத்து குறித்து அறிந்த சகோதரர்கள் Comments பகுதியில் தெரிவிக்கவும்.


0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More