தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

July 04, 2013

பரங்கிப்பேட்டை ரயில்வே கேட்டில் ஆபத்தை உணராமல் கடக்கும் பைக்குகள்!

பரங்கிப்பேட்டை, ஜுன்.04: பரங்கிப்பேட்டை அகரம் ரயில்வே கேட் தடுப்பு கட்டையில் செயின் இல்லாததால் ரயில் வரும் நேரத்தில் பாதுகாப்பற்ற நிலையில் தடுப்பு கட்டை வழியாக பைக்குகள் உள்ளே நுழைந்து ரயில் பாதையைக் கடந்து செல்கின்றன.


பரங்கிப்பேட்டை - பு.முட்லூர் நெடுஞ்சாலை அகரத்தில் சாலையின் குறுக்கே விழுப்புரத்திலிருந்து மயிலாடுதுறைக்குச் ரயில்வே பாதை செல்கின்றது. விழுப்புரம், மயிலாடுதுறை மார்க்கத்தில் இருந்து ரயில் வரும் நேரத்திற்கு முன்பு விபத்துகள் நடக்காத வகையில் ரயில்வே கேட் மூடப்படும்.

இதனால் பரங்கிப்பேட்டை, பு.முட்லூர் மார்க்கத்தில் இருந்து வரும் பஸ்கள், கார், வேன், பைக் உள்ளிட்ட வாகனங்கள் ரயில்வே கேட்டில் நின்று கேட் திறக்கப்பட்டதும் வாகனங்கள் செல்லும்.


அகரம் ரயில்வே கேட் தடுப்பு கட்டையின் வழியாக பைக்குகள் உள்ளே நுழையாதபடி தொங்கும் செயின் இல்லாததால் ரயில் வரும் நேரத்திலும் பாதுகாப்பற்ற நிலையில் தடுப்பு கட்டை வழியாக பைக்குகளை வளைத்து, நெளித்து ரயில் பாதையைக் கடந்து செல்கின்றன. அதுபோன்ற நேரங்களில் திடீரென ரயில் வந்துவிட்டால் மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுவிடும்.

எனவே மனித உயிர்களைக் காப்பற்ற அதிகாரிகள் ரயில்வே கேட் தடுப்பு கட்டையில் பைக்குகள் உள்ளே நுழையாதப்படி செயின் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்கின்றனர்.

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More