தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

July 24, 2013

தமிழக அரசே நடவடிக்கை எடு!


இராமநாதபுரம்.ஜுலை.24:கடந்த 22.07.2013 அன்று இராமநாதபுரம் கேணிக்கரை அருகிலுள்ள செய்யதம்மாள் பள்ளி உள்வளாகத்தில் உள்ள முஸ்லிம்களின் புனித இடமான பள்ளிவாசலில் சில கயவர்களால் மலம் ஜலம் கழிக்கப்பட்டும் அங்குள்ள இஸ்லாமிய புத்தகங்களை தீயிலிட்டு எரித்தும் இந்த வெறிச்செயலை செய்துள்ளார்கள்.

இந்த மானகெட்ட வெறியர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து தண்டனை அளிக்கவேண்டும்.

இதனை செய்ய தமிழக அரசு தவறினால் ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாயத்தையும் அறைகூவல் விட்டு அழைத்து இராமநாதபுரத்தில் வரலாறு காணாத மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை இன்ஷாஅல்லாஹ் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் என்பதை தமிழக அரசுக்கு எச்சரிக்கை செய்கிறோம்.


0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More