தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

July 08, 2013

பரங்கிப்பேட்டை பவர் பிளாண்ட்டில் தொழிலாளி பலி!

பரங்கிப்பேட்டை, ஜுலை.08 பரங்கிப்பேட்டை அடுத்த கரிக்குப்பத்தில் ஐ.எல்.எப்.எஸ்., பவர் பிளாண்ட் இயங்கி வருகிறது. இதில் வட இந்தியர்கள் வேலை செய்து வருகின்றனர். 


நேற்று முன்தினம் பீகார் மாநிலம் முசாப்பூர் மாவட்டம் சடுவா கிராமத்தைச் சேர்ந்த பூட்டான் மித்தோர் மகன் ரவீந்திர குமார், 22, என்பவர் உயர் மின் அழுத்த கோபுரத்தில் பணி செய்து கொண்டிருந்தார். 

அப்போது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து அதே இடத்தில் இறந்தார். இதனால், வட இந்திய தொழிலாளிகள் ஒன்று சேர்ந்து, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். 

இதனால் அங்கு பரபரப்பபு நிலவியது.பரங்கிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். இறந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு நிவாரணத் தொகை வழங்குவதாக கம்பெனி ஒப்புக்கொண்டதால் தொழிலாளர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

1 comments:

If they are working without safety precautions result will be Fatal....

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More