தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

July 19, 2013

TNTJ அழைப்பாளர்கள் புத்தகங்களை வெளியிட்ட சவூதி ஜாலியாத்!


ரியாத்,ஜுலை.19: அல்லாஹ்வின் கிருபையால் TNTJ அழைப்பாளர் சகோ. S.அப்பாஸ் அலீ MISc எழுதிய "குர்ஆன் ஹதீஸ் ஒளியில் மண்ணறை வாழ்க்கை" நூலினை இவ்வருடம் ரப்வா ஜாலியாத், ரியாத் வெளியிட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!


அல்லாஹ்வின் கிருபையால் இதுபோன்று சகோ. பிஜே அவர்களின் பல நூல்களை சவூதி அரசின் அங்கீகாரம் பெற்ற ஜாலியாத்துகள் (இஸ்லாமிய அழைப்பு வழிகாட்டி மையங்கள்) பல சமயங்களில் வெளியிட்டுள்ளன.


அவற்றுள் "இதுதான் பைபிள்" "இயேசு இறைமகனா?" "பித்அத் ஓர் ஆய்வு" "திருமறையின் தோற்றுவாய்" "நோன்பு" "மனிதர் நபிகள் நாயகம்" மற்றும் "அர்த்தமுள்ள இஸ்லாம்" போன்றவையும் அடங்கும்.


சில வருடங்களுக்கு முன்பாக நஸீம் ஜாலியாத் மூலம் "மாமனிதர் நபிகள் நாயகம்" இலவச பதிப்பாக வெளியிடப்பட்டது. புத்தகத்தின் முக்கியத்துவத்தையும், முஸ்லிம் – முஸ்லிமல்லாத சகோதர சகோதரிகளிடம் அந்த புத்தகம் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக, ரப்வா ஜாலியாத் மீண்டும் இப்புத்தகத்தை மீள்பதிப்பு செய்து வெளியிட்டுள்ளது. 

பல்லாயிரக்கணக்கான பிரதிகள் அச்சடிக்கப்பட்டு இலவசமாக விநியோகிக்கப்படுகின்றன.

எல்லாப்புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More