தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

August 15, 2013

சு(தந்)த்திரம்...!

ஆக.15: எண்ணூறு ஆண்டுகள் இந்தியாவை ஆண்டவர்கள் என்று நாம் அடிக்கடி மார் தட்டிக் கொள்வதுண்டு. இதில் சற்றும் நமக்கு உடன்பாடில்லை. காரணம், இழந்ததை நினைத்துப் பெறுமை என்ன வேண்டிக் கிடக்கிறது, என்கிற வருத்தம் தான். என்னூறு ஆண்டுகள் ஆண்டதாய்ச் சொல்வதைக் கூடக் காவிக் கூட்டம் இன்று நமக்கெதிராக வரலாற்றுத் திரிபுகள் மூலம் பகை செய்து கொண்டிருக்கிறது.


எண்ணூறு ஆண்டுகளின் ஆட்சியின் விழுமியங்களை, சுவடுகளையும் 56 ஆண்டுகளில் மிகச் சுலபமாக அழிக்க முனைய முடிகிறது என்றால், விழிப்புனர்வின்றி தூங்கிக் கொண்டிருக்கிறோம். நாம் வசதியாக வாழக் கணக்குப் போடுகிறோமே தவிர. பாதுகாப்பாக வாழ திட்டம் போடுவது கிடையாது. 

சுதந்திரத்திரத்திற்காக உழைத்தோம், மறுப்பதற்கில்லை. அதை அனுபவிப்பதற்காக உழைத்தோமா? என்கிற கேள்விக்கு பதிலில்லை. சொந்தக் காரில் பவனி வர ஆசைப்பட்ட நம் முன்னோர்கள், அரசுக் கார்களில் ஆசைப்படாமல் போனது, மிகப் பெரிய நஷ்டக் கணக்கை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். 


நேற்றும் இன்றும் பார்க்கிறேன். வரலாற்றுச் சான்றுகளை வாரி இரைக்கிறீர்கள். சந்தோசம். வரலாற்றைத் திருப்ப என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?. இந்த நாட்டில் ஓர் இஸ்லாமியன் கடை நிலை காவலர் பணியில் கடைமையாற்றுவது கூட இன்றைக்குக் கேள்விக் குறியாக்கப்பட்டிருக்கிறதே?!(இடை காட்டூர் மாதர் சிந்தா). ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 15 ல் இது போன்று பரப்புவதால் மட்டுமே நாம் சாதிப்பது என்ன?. கல்விக் கூடங்களிலே, எம் வரலாற்று முன்னோர்கள் கொடியவர்களாய் சித்தரிக்கப்படுவதும், ஊடகங்களிலே எம் இன்றைய இளைஞர்கள் தீவிரவாதிகளாய் சித்தரிக்கப்படுவதும், அதை அவ்வப்பொழுது கண்டிப்பதும் அது பின் தொடர்வதும் பின்னர் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவதும் தானே நாம் இந்த 56 ஆண்டு காலத்தில் சாதித்திருக்கும் வரலாறு.!. மாற்றியிருக்கிறோமா? சுதந்திரத்தை மாசில்லாமல் சுவாசித்திருக்கிறோமா?!

தவிர்க்க முடியாத சக்தியாய் மாறிப் போ!. அரசு எந்திரத்தின் எல்லா இடத்திலும் தவிர்க்க முடியாத சக்தியாய் இந்திய இஸ்லாமியனே நீ மாற வேண்டும். அரசு எந்திரத்தின், ஒவ்வொரு திசுவிலும் உன் முகம்  பொறிக்கப்பட வேண்டும். இந்திய அசோகச் சக்கரத்தின் சுழற்ச்சியின் மையப் புள்ளியாய் நீ மாற வேண்டும். நீயில்லாத இந்தியாவை நினைப்பது கூட கஷ்டமாக உலகிற்க்குத் தோண்ற வேண்டும். 4% சதவீத நாதாறிக் கூட்டம் நரித் தந்திரத்தால் நாட்டை ஆள்கிற பொழுது, 20% சதவீதத்திற்கு மேல் உள்ள நீ ஏன் முடியாது. கடை நிலை உழியனுக்கு முயற்சி செய்வதை விடுத்து. முதல் நிலை உழியனாக முடி சூட்டிக் கொள். கடை நிலை ஊழியன் உன் கண்கானிப்பில் பின் சேரட்டும். 

அதற்காக நீ இனி மேல் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் ஆக முடியாது. ஆனால் ஆக்க முடியும். என் வீட்டிலும் உன் வீட்டிலும் பாஸ்போர்ட் என்கிற ஒன்று நம்மோடு ஒழிந்து போகட்டும். சம்பாதிக்க கல்வி கற்றது போய், சமுதாயத்திற்காகக் கல்வி கற்றல் தொடரட்டும். இந்தத் தந்திரம் நீ தீட்டவில்லையெனில், எதிர் கால இந்தியாவில் உன் சுதந்திரம் கேள்விக் குறியாகிவிடும் என்பதில் வியப்பில்லை. 

- முனீப் அபுஇக்ராம்

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More