தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

August 19, 2013

நபிவழி திருமணம்!

பரங்கிப்பேட்டை,ஆக.19: அல்லாஹுவின் கிருபையால் இன்று (19.08.2013) பரங்கிப்பேட்டை TNTJ மர்கஸில் அஸர் தொழுகைக்கு பிறகு கலிமா நகரை சேர்ந்த சகோ.யூசுப் அலி அவர்களுக்கு நபிவழிப்படி எளிமையான முறையில் திருமணம் தவ்ஹீத் ஜமாஅத் பதிவேட்டில் (தப்தரில்) நடைபெற்றது.

இதில் சிதம்பரம் தவ்ஹீத் பள்ளி இமாம் சகோ.செங்கம் ஷாகித் அவர்கள் “இஸ்லாமிய திருமணம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!

”பாரக்கல்லாஹு லக வபாரக்க அலைக வஜமஅ பைனகுமா ஃபீ கைர்”

(அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக. நல்ல விஷயங்களில் உங்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பானாக)

மேலும் அவனது அத்தாட்சிகளில் ஒன்று அதாவது அவன்தான் உங்களுக்கு துணைகளை உங்களிலிருந்தே ஏற்படுத்தினான் நீங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து நடந்துக் கொள்ள வேண்டுமென்பதற்காக உங்கள் உள்ளங்களில் அன்பையும் கருணையையும் பெருகச் செய்தான். நிச்சயமாக அறிவுடையோருக்கு இதில் தெளிவான அத்தாட்சி இருக்கிறது. 

[திரு குர்ஆன் 30:21]


0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More