தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

August 21, 2013

இணையம் மூலம் மின் கட்டணம் செலுத்துவது இப்போது மிகவும் சுலபம்!

ஆக.21:இனி இதை அவசியம் பயன் படுத்துங்க. உங்க வீட்டுக்கு மட்டுமின்றி, பல வீட்டுக்கும் சேர்த்தே நீங்க ஒருத்தரே பில் பே பண்ணலாம். இதன் மூலம் நீங்களோ உங்கள் குடும்பத்தவரோ பல கிலோ மீட்டர் வெயில் மழையில் ஈபி ஆபீஸ் அலைந்து... கியூவில் நின்று... வேற்று விறுவிறுத்து... பெட்ரோல் செலவு அழுது... இப்படி, எல்லாத்தையும் மிச்சம் பண்ணுவது மட்டுமல்ல... பெரியதொரு உதவியை நீங்கள் பிறருக்கு பண்ணலாம்.

குறிப்பாக, நகரத்தில் ஆன்லைனில் முகநூலில் மொக்கை போட்டுக்கொண்டு இருக்கும் நீங்கள் (சும்ம்ம்ம்மா ஜாலிக்கு ) ஓரிரு நிமிடத்தில் உங்கள் கிராமத்து வீட்டு மின் கட்டண வேலையை முடித்து விட்டு... உங்கள் பெற்றோருக்கு போன் போட்டு... "கட்டியாச்சு உம்மா, வாப்பா கட்டியாச்சு மாமா கட்டியாச்சு நானா" என்று சொன்னால்... அது அவர்களின் ஒரு நாள் மாபெரும் வேலைச்சுமையை... முடிச்சு கொடுத்து விட்டீர்கள் என்று அர்த்தம். 

இந்த உதவிக்காக உங்களுக்கு எவ்வளவு மகிழ்ந்து நன்றி சொல்வார்கள் தெரியுமா..? அடுத்தவரை இன்புறுத்தி மன நிறைவு காணுவதில் உள்ள சுகமே தனிதான் சகோ..! நீங்களும் ஆரம்பிங்க இன்றே..!

உங்களுக்காக ஒரு எளிய விளக்க வீடியோவை தேடி புடிச்சு ஷேர் பண்ணி இருக்கேன். அருமையா விளக்கி இருக்கார் சகோ. வெங்கடேஷ்..! 


அப்புறம், அதில் நீங்க, உங்கள் ஊரின் " Region " எது என்று தேர்வு செய்ய.... இந்த லிங்கில் போயி.. Ctrl F போட்டு, ஊரு பேரு அடிச்சு... அட்டவணையில் ஈசியா தேடி எடுங்க சகோஸ். 


முக்கியமான இதை வீடியோவில் சொல்ல மறந்து விட்டுட்டார்..!
நன்றி: முஹம்மது ஆசிக்

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More