தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

September 17, 2013

குவாட்டர் பாட்டில் வேண்டாம்! வாட்டர் பாட்டில் போதும்!! (வீடியோ)

செப்.17: தண்ணி வியாபாரத்தை மாற்ற தமிழக அரசுக்கு கோரிக்கை: தினம் ஒரு தகவல்!

10 ரூபாய்க்கு மினரல் வாட்டர் பாட்டில்கள் வழங்கும் தமிழக அரசின் புதிய திட்டம் வரவேற்கத்தக்கது. இந்த தூய தண்னீரை விற்கும் அதே நேரத்தில் நாற்றமெடுத்த டாஸ்மாக் தண்ணி விற்பனையை தமிழக அரசு நிறுத்த வேண்டும்.

மதுவினால் ஏற்படும் தீமைகள் கொஞ்ச நஞ்சமல்ல. மது விற்பனையை ஒழித்துவிட்டு மினரல் வாட்டர் விற்பனையை தமிழக அரசே கையில் எடுத்தால் மது விற்பனையால் கிடைக்கும் லாபத்தை விட பல மடங்கு மினரல் வாட்டர் விற்பனையில் லாபம் ஈட்டலாம் என்ற ஆலோசனையை வழங்குகின்றது இன்றைய தினம் ஒரு தகவல்....

தண்ணி வியாபாரத்தை தமிழக அரசு மாற்றினால் தள்ளாடும் தமிழகம் தலைநிமிரும்.

குறிப்பு:
மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டத்தை முதலில் இயற்றியிருக்க வேண்டியது திராவிடக் கட்சிகள் தான்; ஆனால் அவர்கள் வாய்மூடி மௌனியாக இருக்கின்றார்கள் என்று செப்டம்பர் 2ஆம் தேதி பேசப்பட்ட தினம் ஒரு தகவல் உரையைத் தொடர்ந்து செப்டம்பர் 9ஆம் தேதி கருணாநிதி மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும் என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளார். அவர் தனது அறிக்கையில் நம் உரையில் மேற்கோள்காட்டியுள்ள சம்பவத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார். 

(எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!) 

அதுபோல இந்த கோரிக்கையும் ஆட்சியாளர்களை எட்டும்; அவர்களது செவியை தட்டும் என்று நம்புகின்றோம். இன்ஷா அல்லாஹ்....



0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More