தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

September 18, 2013

பல்லிளிக்கும் பகுத்தறிவு(?)வாதம்: நாத்திகவாதிகளுக்கு அழைப்பு!

செப்.18: கற்சிலைகளுக்கு சக்தி உண்டா? அவை பார்க்குமா? கேட்குமா? என்று கேள்வி எழுப்பிய பகுத்தறிவு(?)வாதிகள் இப்போது பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கும் மூடநம்பிக்கையை காண்கின்றோம். 

பெரியார் கூறியுள்ள பகுத்தறிவுக்கு முரணான உளறல்கள் அனைத்தும் டிஎன்டிஜே மார்க்க அறிஞர்களால் தொகுக்கப்பட்டு போலி பகுத்தறிவுவாதிகளின் வண்டவாளங்களை தோலுரிக்க ஏதுவாக அடுக்ககடுக்கான ஆதாரங்கள் தயார் நிலையில் உள்ளன. 

ஏற்கனவே இருந்ததைவிட இப்போது ஆயிரம் மடங்கு குறிப்புகள் தயாராகிவிட்டன. தற்போது அவர்கள் நம்முடன் விவாதிக்க வருவார்களேயானால் ஏற்கனவே கிழிந்து தொங்கியதைவிட அவர்களது உண்மை முகம் மென்மேலும் தோலுரித்து தொங்கவிடப்படும் என்பதை சொல்லி வைக்கின்றோம்.

பகுத்தறிவு சிந்தனைகள் என்ற பெயரில் பகுத்தறிவுக்கு கொஞ்சம்கூட சம்பந்தமில்லாத உளறல்களை பகுத்தறிவுவாதம் என்று பேசி வரும் நாத்திக நண்பர்களே! பகுத்தறிவு மார்க்கமாம் இஸ்லாத்தின் பக்கம் வாருங்கள் என்று அழைப்பு விடுக்கும் இன்றைய தினம் ஒரு தகவல்...

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More