தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

September 26, 2013

பெண்ணாடம் இஸ்லாம் ஒர் இனிய மார்க்கம்: திரண்ட பிறமத சகோதர, சகோதரிகள்!

பெண்ணாடம், செப்.26: அல்லாஹுவின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் பெண்ணாடம் கிளை சார்பில் கடந்த 22.09.2013 அன்று ”இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்”  நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மாநில மேலான்மை குழு உறுப்பினர் சகோ.பக்கீர் முஹம்மத் அல்தாஃபி அவர்கள் பிறமத சகோதரர்களின் கேள்விகளுக்கு அறிவுபூர்வமாகவும், சிந்திக்கும் வகையிலும் பதில் அளித்தார்கள். 

350 பிறமத சகோதரர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். கேள்வி கேட்ட 30 சகோதர, சகோதரரிகளுக்கு இலவசமாக குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.

தமிழகத்தில் மாமன், மச்சான்களாக பழகி வரும் இந்து, கிருத்துவ, முஸ்லிம் மக்களுக்கு மத்தியில் மத நல்லிணக்கும் ஏற்படுத்தும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்த வேண்டும் என்று நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறமத சகோதரர்கள் தங்கள் ஆவாவை தெரிவித்தனர். அல்ஹம்துலில்லாஹ்!


0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More