தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

September 28, 2013

திருச்சி - மோடி பேச்சின் பித்தலாட்டங்கள் அம்பலம்!

செப்.28: திருச்சி - மோடி பேச்சின் பித்தலாட்டங்கள் அம்பலம்!  (தினம் ஒரு தகவல்)

இந்தியாவிலுள்ள மாநிலங்களில் குஜராத் மிகவும் பின் தங்கிய மாநிலம் என்பதை பொருளாதார வல்லுனர்கள் குழு புள்ளிவிபரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளது.

ரகுராம் ராஜன் தலைமையிலான இந்தக் குழு நேற்று (28.09.2013) இந்த ஆய்வறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது. இதன் மூலம் மோடி மற்றும் மீடியாக்களின் பொய் முகம் அம்பலமாகியுள்ளது.

மானம் கெட்ட கட்சி என்று பா.ஜ.க.வை திட்டிய மோடி!

பா.ஜ.க.வினரால் தான் நாட்டையும்இ நாட்டின் தன்மானத்தையும் கட்டிக்காட்க முடியும் என்று திருச்சியில் பேசிய மோடியின் பேச்சில் துளியளவாவது உண்மை உள்ளதா? 

வாஜ்பாய் தலைமையிலான ஆட்சியில் தன்மானத்தை இழந்து நாட்டின் கௌரவத்தை அடகுவைத்த பா.ஜ.க. இது பற்றி பேசலாமா? 

கார்கில் பகுதியை ஆக்கிரமித்து அநியாயம் செய்த பாகிஸ்தான் அதிபர் முஷரபிடம் கைகோர்த்ததன் மூலமும்இ பாகிஸ்தானுக்கு பேருந்து விட்டதன் மூலமும் பா.ஜ.க.வும்இ வாஜ்பேயும்இ அதில் அங்கம் வகிக்கும் தானும் மானம் கெட்டவர்கள்தான் என்பதை நரபலி மோடியே ஒப்புக்கொண்விட்டார்.

திருச்சியில் மக்களை மடையர்களாக்கிய மோடி!

தமிழ் மொழியின் பெருமையை பேசுவதாக நினைத்து தான் ஒரு கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதி என்பதை மோடி நிரூபித்துள்ளார். 

இவ்வாறாக மோடி பேசிய பித்தலாட்ட பேச்சுக்கள் எதையுமே விமர்சிக்க திராணியற்ற மோடியின் அடிவருடிகளான மீடியாக்கள்தான் மிகவும் ஆபத்தானவர்கள். 

எழுத்து விபச்சாரம் புரியும் இந்த பத்திரிக்கைகளிடமும்இ மோசமான தொழில் புரியும் மீடியாக்களிடமும் நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை விளக்குகின்றது இன்றைய தினம் ஒரு தகவல்...

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More