தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

September 18, 2013

சி.முட்லூர் கல்லூரியில் புதிய பாடப்பிரிவு!

சிதம்பரம்,செப்.18: சி.முட்லூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் அரசு அனுமதிக்கப்படுள்ள புதிய வகுப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.சிதம்பரம் அடுத்த சி.முட்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2013-2014-ஆம் கல்வி ஆண்டில் தமிழ் பாடத்தில் எம்.ஏ., எம்.பில்., பி.எச்டி., தாவரவியல் பாடத்தில் எம்.எஸ்.சி., எம்.பில்., பி.எச்டி., கணிதம் பாடத்தில் எம்.பில்., பி.எச்டி., படிப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த பாடப்பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

எம்.ஏ., எம்.எஸ்சி., பாட வகுப்புகளுக்கு கல்லூரி அலுவலகத்தில் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்படுகின்றது.

எம்.பில்., பி.எச்டி., பாடப்பிரிவு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் திருவள்ளுவர் பல்கலைக் கழகம் இணையதளத்தில் (http://thiruvalluvaruniversity.ac.in/) பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் 30-ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More