தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

September 19, 2013

பரங்கிப்பேட்டையில் பைக்கிலிருந்து விழுந்து ஒருவர் பலி!


பரங்கிப்பேட்டை, செப்.19: பரங்கிப்பேட்டையில் நடந்து சென்றவர் மீது மோதி பைக்கிலிருந்து விழுந்து ஒருவர் இறந்தார்.

ஒரிசா மாநிலம், கஞ்சம் மாவட்டம் பெண்தாசாஹி பகுதியைச் சேந்தவர் அஜய ஸ்பெயின் (21) பொக்லைன் டிரைவர். பரங்கிப்பேட்டை அடுத்த கரிக்குப்பம் கிராமத்தில் உள்ள தனியார் கம்பெனிக்காக நடந்து வரும் கடுமானப் பணியில் ஈடுபட்டிருந்தார்.

நேற்று முன்தினம் பரங்கிப்பேட்டையில் இருந்து புதுக்குப்பத்திற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். மாதாக் கோவில் அருகே சாலையில் நடந்து சென்ற அதே பகுதியைச் சேர்ந்த பரசுராமன் என்பவர் மீது மோதி நிலை குலைந்து விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

படுகாயமடைந்த பரசுராமன் பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரங்கிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More