தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

September 30, 2013

கல்வி வழிகாட்டுதல் பகுதி கேள்வி: NET மற்றும் SLET தேர்வு தொடர்பாக‌!

செப்.30: அன்பு சகோதரர் கிருஷ்ணன் அவர்களுக்கு....

அந்த ஒர் இறையின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீதும் உங்கள குடும்பத்தாரின் மீதும் என்றும் நிலவட்டுமாக.

இந்த பதில் உங்களை பூரண உடல் நலதுடனும் சீரிய சிந்தனையுடனும் சந்திக்க எல்லாம் வல்ல அந்த ஓர் இறையிடம் பிரார்த்தனை செய்கின்றேன்.
உங்களது கேள்வியை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) பரங்கிப்பேட்டை கிளையின் அதிகார பூர்வ இனையதளத்தில் பதிவு செய்தமைக்கு நன்றி.

முதலில் NET நுழைவு தேர்வை பற்றி சிரிய விளக்கத்தையும் அதற்க்கான தகுதிகளை பற்றியும் நீங்கள் அறிந்து கொள்வது அவசியம்.

National Eligibility Test என்ற தேர்வை தான் NET என்று சுருக்கமாக அழைப்பார்கள். இது முதுநிலை பட்டதாரிகள் (Master Graduates) முனைவர் பட்டம்(Ph.D) பெற பல்கலைக்கழக தேர்வு ஆனையம்(UGC) நடத்தும் ஒரு முக்கியமான தேர்வாகும்.

கணினி அறிவியல் மற்றும் பயன்பாடு, சமூக அறிவியல், தடயவியல் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் தேர்வு உட்பட பல பாடங்களில் இந்த தேர்வு நடத்தபடுகின்றது.

மற்ற அறிவியல் சார்ந்த துறைகளுக்கு அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலுடன் (CSIR) பல்கலைக்கழக தேர்வு ஆனையம்(UGC) இனைந்து CSIR-NET என்ற தேர்வையும் நடத்துகின்றது.

இந்த தேர்விற்க்கு விண்ணப்பிக்க தேர்வாளர் தனது முதுநிலை படிப்பில் குறைந்தது 55 சதவிகிதம் மதிபென் எடுத்து இருக்க வேண்டும்.

ஆதி திராவிடர் பழகுடிஇன வகுப்பை சார்ந்த மற்றும் உடல் ஊனமுற்ற தேர்வாளர்கள் முதுநிலை படிப்பில் குறைந்தது 50 சதவிகிதம் மதிபென் எடுத்து இருந்தால் போதுமானது.

முது நிலை படிப்பை தொலைதூர கல்வியில் முடித்து இருந்தாலும் இந்த தேர்வை எதிர் நோக்க தகுதியானவர் தான்....

இந்த தேர்விற்க்கான விண்ணப்பம் ஜூன் மாதம் விநியோகிக்கபடும் ஜூலை மாதம் தேர்வு நடைபெறும்.

State Level Eligibility Test என்ற தேர்வை தான் SLET என்று அழைக்கின்றனர் நாட்டில் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சியில் ஒரே சீரான தரத்தை ஏற்படுத்த தான் SLET என்ற இந்த‌ நுழைவு தேர்வை  இந்திய அரசாங்கம் நடத்துகின்றது.

இந்த தேர்விற்க்கு விண்ணப்பிக்க தேர்வாளர் தனது முதுநிலை படிப்பில் குறைந்தது 55 சதவிகிதம் மதிபென் எடுத்து இருக்க வேண்டும்.

ஆதி திராவிடர் பழகுடி இன வகுப்பை சார்ந்த மற்றும் உடல் ஊனமுற்ற தேர்வாளர்கள் முதுநிலை படிப்பில் குறைந்தது 50 சதவிகிதம் மதிபென் எடுத்து இருந்தால் போதுமானது.

முது நிலை படிப்பை தொலைதூர கல்வியில் முடித்து இருந்தாலும் இந்த தேர்வை எதிர் நோக்க தகுதியானவர் தான்....மேலும் விவரங்களுக்கு உங்கள் தொலைபேசி என்னை கொடுக்கவும்.

Please visit 
www.tntjsw.net

- கலீல்லுர் ரஹ்மான்
   மாணவரனி

கல்வி சம்மந்தமாக கேள்வி கேட்க கீழ்கானும் லிங்கை கிளிக் செய்யவும்.0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More