தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

September 28, 2013

அமீரக கடலூர் மாவட்ட TNTJ ஒருங்கினைப்பு கூட்டம்!

துபை, செப்.27: அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அமீரக கடலூர் மாவட்ட ஒருங்கினைப்பு கூட்டம் துபை - தேய்ரா TNTJ தலைமை மர்கசில் 27.09.2013 அன்று பொறுப்பாளர் முஹம்மது இஸ்மாயில் தலைமையிலும் மண்டல் இனை செயலாளர் சகோ.நவாஸ் முன்னிலையிலும் நடைபெற்றது.

முதலில் துவக்கவுரை மற்றும் அமீரக கடலூர் மாவட்ட TNTJ ஒருங்கினைப்பு குழுவின் செயல்பாடுகள் ஒர் பார்வை ஆகியவற்றை பற்றி பொறுப்பாளர் சகோ.முஹம்மது இஸ்மாயில் உரை நிகழ்த்தினார்.

பின்னர் தொலைப்பேசி வாயிலாக கடலூர் மாவட்ட தலைவர் சகோ.அப்துர் ரஜ்ஜாக் அவர்களை தொடர்பு கொண்டு மாவட்டத்தின் தாவா, சமுதாய பணிகளை பற்றியும் மற்றும் கலந்து கொண்ட சகோதரர்களின் கேள்விகளுக்கும் விளக்கமாக பதில் அளித்தார்.

அதனை தொடர்ந்து சகோ.யூசுப் அலி அவர்கள் “ஏகத்துவம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இறுதியாக பொதுவான ஆலோசனை மற்றும் துஆ- வுடன் கூட்டம் இனிதே நிறைவுப்பெற்றது.

இதில் மாவட்டத்தை சேர்ந்த அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!

தீர்மானங்கள்:
  • மாதந்தோறும் பிறமத தாவா-விற்க்காக 25 திரு குர்ஆன் கூட்டமைப்பு சார்பாக பொறுப்பேற்க்கப்பட்டது.
  • மாவட்ட நிர்வாகத்திற்க்காக Scan + Photo copy Machine வாங்கி தர பொறுபேற்க்கப்பட்டது.
  • மாவட்ட தாவா மற்றும் நிர்வாக செலவினங்களுக்கு பொருளாதார உதவி செய்வது.
  • மாவட்டத்தில் இன்னும் வீரியமாக பிறமத தாவாக்களையும், ஷிர்க் எதிரான தாவாக்களையும் மூடுக்கிவிடுமாறு கோரிக்கை வைப்படுகின்றது.
  • இன்ஷாஅல்லாஹ் வருகின்ற ஜனவரி 28 சென்னையில் நடைபெறும் இடஒதுக்கீடு சிறை செல்லும் போராட்டத்திற்கு நமது மாவட்டத்திலிருந்து  அதிகப்படியான மக்களை பங்குகொள்ள வேண்டும்.




0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More