தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

October 21, 2013

பரங்கிப்பேட்டையில் 75 மில்லி மீட்டர் மழை!

பரங்கிப்பேட்டை, அக்.21: கடலூர் மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. அதிக பட்சமாக பரங்கிப்பேட்டையில் 75 மில்லி மீட்டர் மழை பதிவானது.

வடகிழக்கு பருவமழை நாளை முதல் தொடங்க இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இதற்கிடையே வெப்பசலனம் காரணமாக கடலூர் உள்பட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக லேசான மழை பெய்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் நேற்று சராசரியாக 11.30 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. பரங்கிப்பேட்டையில் அதிக அளவாக 75 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.


0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More