தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

October 26, 2013

அம்மாஸ் தைக்கால் வக்ஃப் சொத்து அறிக்கையும், உணர்வு செய்தியும்!

பரங்கிப்பேட்டை, அக்.26: பொது வக்ஃப் சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும், அபகரிக்கப்பட்டுள்ள வக்ஃப் சொத்துக்கள் மீட்கப்பட வேண்டும் என்ற சிந்தனையும், குரலும் கடந்த 15 ஆண்டுகளாக வலுப்பெற்று வரும் வேலையில்,  பல்வேறு கவன இருப்பு கூட்டங்கள், தீர்மானங்கள் போன்றவற்றை சமுதாய அமைப்புகள் தொடர்ந்து செய்து வருகின்றன.

இந்நிலையில் பரங்கிப்பேட்டை அம்மாஸ் தைக்கால் மற்றும் ஆலிம் சாஹிப் தர்கா வக்ஃபு புஞ்செய் நிலங்கள் வஃக்ப் செய்ய பட்டதென்றும் அதை விற்கவோ, பட்டா மாற்றவோ யாருக்கும் உரிமை இல்லையென்றும்,
A. லியாக்கத் அலி (வக்ஃப் கண்காணிப்பகம் – பண்ருட்டி) இடமிருந்து  10.10.2013 தேதி இட்டு,
  • சார் பதிவாளர் – மஞ்சக்குப்பம் – கடலூர்,
  • சார் பதிவாளர் – பரங்கிப்பேட்டை,
  • முதன்மை செயல் அலுவலர், வக்ஃப் வாரியம் சென்னை,
  • வருவாய் கோட்டாச்சியர் – சிதம்பரம், வட்டாட்சியர் – சிதம்பரம்,
  • தலைவர் – பரங்கிப்பேட்டை பேருராட்சி, 
  • செயல் அலுவலர் – பரங்கிப்பேட்டை பேருராட்சி ஆகிய விலாசங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நகல் நமக்கு கிடைத்தது.

மக்கள் பார்வைக்கு அந்த நகலை வெளியிடுகிறோம்.

நன்றி: PNOTIMES
கடந்த 2012 ஜுன் மாதம் உணர்வு வார இதழில் வந்த செய்தியை நமது (TNTJPNO.COM) இணையதளத்தில் அப்போது வெளியிட்டுயிருந்தோம். தற்போது காலத்தின் தேவையை கருதி மீள்பதிவு செய்கின்றோம்...


உணர்வின் செய்தி எதிரொலி: பரங்கிப்பேட்டை வக்ஃபு நிலம் பறிபோவது நிறுத்தம்!

கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டையில் இருக்கின்ற ஆசராகானா தெருவில் உள்ளன, அந்த வக்ஃபு நிலங்கள். இரு வேறு சர்வே எண்களைக் கொண்டதாக (6/3 மற்றும் 6/7) அவை இருந்தாலும் ஒரே தர்காதான் அது என்பது நேரில் சென்று பார்த்தபோது நாம் காண முடிந்தது.

இரண்டு சர்வே எண்கள் கொண்ட அந்த இடத்தின் மொத்த பரப்பளவு நான்கு ஏக்கருக்கும் மேலாகும்.

கடந்த 1959-ல் இந்நிலங்கள் வக்ஃபு சொத்தாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பதை ஆவணங்கள் கூறுகின்றன. இவ்விரண்டு சொத்துக்களும் இரு அவுலியாக்களின் பெயரில் தர்காக்களாக இருந்துள்ளன...


முழுமையான செய்திக்கு கீழ்கானும் லிங்கை கிளிக் செய்யவும்...

http://www.tntjpno.com/2012/06/blog-post_09.html

2 comments:

இது போல பக்கீம்ஜாத் பள்ளி வாசல் பக்கத்தில் உள்ள பக்கீா் மாலிம் தா்காவின் தெற்கு பகுதியில் உள்ள மரம் அறுக்கும் மில் வைத்துள்ள முழு காலி மனையும் பக்கீா் மாலிம் தா்காவினா வக்பு சொத்தாகும் இதை பலா் ஆக்கிரமிப்பு செய்துள்ளனா் இதை மீட்க தயஉு செயது வக்பு முலம் முயறசி செய்யஉும் . முன்பு இருந்த பால் கார தைக்கா மாலிமாா் பலபோிடம் தன் சொந்த இடம் போல காசு வாங்கிட்டு இடம் கொடுத்தான் மஹல்லா வாசிகள் யாரும் கண்டு கவில்லை இது பற்றி முழு விபரம் ஆடிடா் இல்யாஸ் நானா விற்கு தொியும் தயஉு செய்து இடத்தை மீட்க முயற்ச்சி செய்யஉும்

ஸலாம்,

எழுத்துப்பூர்வமாக (மனு கொடுத்து) சம்மந்தப்பட்ட நிர்வாகம் பரங்கிப்பேட்டை TNTJ கிளையை அனுகினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமை நடவடிக்கையில் இறங்கும். இன்ஷாஅல்லாஹ்!

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More