தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

October 27, 2013

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு!

அக்.27: டெங்கு மற்றும் சிக்கன் குனியா நோயின் அறிகுறிகள்!

கடுமையான காய்ச்சல், மூட்டுவலி, உடல்வலி, தலைவலி, கண்கள் சிவத்தல், கண்களில் வலி மற்றும் கைகால் வீக்கம்.

மேற்கண்ட நோய் அறிகுறிகள் உடலில் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் அணுகி இரத்த பரிசோதனை செய்து சிகிச்சை பெற்றுக்கொள்ளவும்.


தடுக்கும் முறைகள்:
  • டெங்கு மற்றும் சிக்கன்குனியா காய்ச்சல், பகல் நேரங்களில் கடிக்கக்கூடிய ஏடிஸ் என்ற கொசுவினால் பரவுகின்றது. இக்கொசுகள் வீட்டை சுற்றியுள்ள பயன்படுத்தாத பொருட்கள், பாட்டில், பிளாஸ்டிக் கப், ஆட்டுக்கல், தேங்காய் மட்டை, டயர் போன்ற பொருட்களில் தேங்கியிருக்கும் நீரில் உற்பத்தியாகிறது.

கொசு ஒழிப்பு நடவடிக்கைகள்:

  • ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழித்தல் மற்றும் நீர் சேமிக்கும் பாத்திரங்களை தேய்த்து கழுவி உலர வைத்தல் போன்றகளை செய்து ஏடிஸ் கொசு உற்பத்தியை தடுத்து டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கலாம்.
  • பயன்படுத்தாத பாட்டில்கள், பிளாஸ்டிக் கப், டயர், உடைந்த பானை, தேங்காய் மட்டை போன்ற தேவையற்ற பிற பொருட்களை அப்புறப்படுத்டுவதன் மூலம் கொசு உற்பத்தியை தடுக்கலாம்.
  • சிமெண்ட் தொட்டி, குடிநீர் தேக்கும் பொருட்கள், கிழ்நிலை நீர்த்தொட்டிகள் முதலியவற்றை தேய்த்து கழுவி உலர வைப்பதன் மூலம் கொசு உற்பத்தியை தடுக்கலாம்.
  • பிரிட்ஜ் கீழ் பகுதி டிரேயில் தண்ணீர் தேங்கும், அப்பகுதியில் தண்ணீர் தேங்கவிடாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
  • குளியல் நீர், கழிவு நீர், பாத்திரம் தேய்க்கும் நீர், இவற்றை தேங்கவிடாமல் பார்த்துகொள்ளவும்.
  • குடி தண்ணீர் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்கவும்.
  • நீர் சேமிக்கும் பாத்திரங்களை மூடி வைத்து உபயோகிக்கவும்.

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More