தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

October 09, 2013

இரத்ததானத்தில் TNTJ மீண்டும் முதலிடம்!

அக்.09: இரத்ததானத்தில் டிஎன்டிஜே மீண்டும் முதலிடம்! இருட்டடிப்புச் செய்த மீடியாக்கள்! (தினம் ஒரு தகவல்)

கடந்த அக்டோபர் 1ஆம் தேதி தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்ட இரத்ததானத்திற்கான விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கிளைகளுக்கு 120 விருதுகள் வழங்கப்பட்டன.

கடந்த 8 வருடங்களாக தமிழகத்திலேயே அதிக அளவு இரத்ததானம் செய்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முதலிடம் பிடித்து வருகின்றது. 

அதைத் தொடர்ந்து அல்லாஹ்வுடைய மகத்தான கிருபையைக் கொண்டு இந்த வருடமும் அதிகமான விருதுகளைக் குவித்து தமிழக அளவில் டிஎன்டிஜே இரத்ததானத்தில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்....

டிஎன்டிஜேயினர் வழங்கக்கூடிய இரத்தமானது 95 சதவீதம் இஸ்லாமியரல்லாத பிறமத சகோதரர்களுக்குத்தான் சென்றடைகின்றது. அவர்கள்தான் இதில் அதிகம் பயன் பெறுகின்றனர். 

முஸ்லிமகள் என்றாலே அவர்கள் தீவிரவதிகள் என்ற மீடியாக்கள் உருவாக்கி வைத்துள்ள பொய்யான சித்திரம் இதன் மூலம் தகர்த்தெறிந்து தரைமட்டமாக்கப்பட்டு வருகின்றது. முஸ்லிம்கள் இரத்தத்தை குடிப்பவர்களல்ல; இரத்தம் கொடுப்பவர்கள் என்ற அழுத்தமான கருத்து பிறமத மக்கள் மத்தியில் மேலோங்கி வருகின்றது.

கடந்த வருடம் மட்டும் டிஎன்டிஜே சார்பாக் 17,622 நபர்கள் இரத்ததானம் செய்துள்ளனர். ஒரு சிறுபான்மைச் சமுதாயம் இந்த அளவிற்கு மனிதநேய பணி செய்துள்ளதே இதை நாம் செய்தியாக வெளியிடுவோம்; அதன் மூலம் நாட்டில் மனிதநேயம் வளரும்; மத நல்லிணக்கம் தலைக்கும் என்று எண்ணி இந்த செய்தியை எந்த மீடியாவாவது வெளியிட்டார்களா என்றால் ஒரு சிறு பெட்டி செய்தியாகக் கூட இந்த செய்தியை எந்த ஒரு மீடியாவும் வெளியிடவில்லை. 

அதே நேரத்தில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாகச் சித்தரிக்கக்கூடிய செய்திகளை மட்டும் வரிந்து கட்டிக் கொண்டு போட்டி போட்டு வெளியிட்டு வரும் இந்த மீடியாக்களின் கேவலபுத்தி இதன் மூலம் வெளிப்பட்டுவிட்டது.

இவர்கள் இத்தகைய செய்திகளை வெளியிடாமல் இருட்டடிப்புச் செய்தாலும் இந்த இஸ்லமிய ஏகத்துவப் படை அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி மறுமை வெற்றி ஒன்றைமட்டுமே எதிர்பார்த்து இன்னும் இன்னும் அதிகமாக இந்த மனித நேய சேவையை செய்யும் என்பது குறித்து விளக்குகின்றது இன்றைய தினம் ஒரு தகவல்.

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More