தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

November 16, 2013

மழை மற்றும் காற்று!

பரங்கிப்பேட்டை, நவ.16: பரங்கிப்பேட்டையில் கடந்த இரண்டு மணிநேரமாக கடுமையான மழை மற்றும் நல்ல காற்றாகவும் உள்ளது.


வங்ககடலில் உருவாகியுள்ள தீவிரம் காற்றழுத்தம் தாழ்வு மண்டலம் நாகை அருகே இன்று மாலை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கரையை கடக்கும் போது 65 கிமீ வேகத்தில் காற்று அடிக்கும் என்றும் வட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் அறிவித்துள்ளது.


இதன் காரணமாக பரங்கிபேட்டையில் இன்று அதிகாலை முதல் கனமழை மற்றும் காற்று வீசி வருகின்றது.

ஊரில் தற்போது மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், செல்போன் சிக்னலும் சரியாக கிடைக்கவில்லை.


புயல் வீசும் போது ஒதும் துஆ:

اَللّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا فِيهَا وَخَيْرَ مَا أُرْسِلَتْ بِهِ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ مَا فِيهَا وَشَرِّ مَا أُرْسِلَتْ بِهِ

அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)க கைரஹா வகைர மாபீ[F]ஹா வகைர மா உர்ஸிலத் பி(B]ஹி. வஅவூது பி(B](க்)க மின் ஷர்ரிஹா வஷர்ரி மா பீ[F]ஹா வஷர்ரி மா உர்ஸிலத் பி(B]ஹி

இதன் பொருள்:இறைவா! இதில் உள்ள நன்மையையும், எந்த நன்மைக்காக இது அனுப்பப்பட்டதோ அந்த நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இதன் தீங்கை விட்டும், எந்தத் தீங்கைக் கொண்டு வருவதற்காக இது அனுப்பப்பட்டதோ அந்தத் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். 
ஆதாரம்: முஸ்லிம் 1496
 

புகைப்படம்: வலீத்

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More