தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

November 16, 2013

நாகை அருகே புயல் இன்று மாலை கரையை கடக்கிறது...

சென்னை, நவ.16: தமிழ்நாட்டை நெருங்கி வரும் புயல் இன்று மாலை நாகப்பட்டினம் அருகே இன்று மாலை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கரையைக் கடக்குபோது மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும்.

வட மாவட்டங்களில் கனமழை பெய்யும். மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் சென்னைக்கு கிழக்கு, தென்கிழக்கே 550 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டு இருந்தது. அது தீவிரம் அடைந்து தென்மேற்கு திசையில் நகர்ந்து நேற்று இரவு 8 மணி அளவில் சென்னையில் இருந்து 490 கிலோ மீட்டர் தொலைவிலும் நாகப்பட்டினத்தில் இருந்து 370 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டு இருந்தது. அந்த புயல் சின்னம் தொடர்ந்து தமிழகத்தை நோக்கி நெருங்கி வருகிறது.

நாகப்பட்டினம் அருகே இன்று மாலை நாகப்பட்டினத்துக்கு அருகே புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் இன்று மழை பெய்யும் என்றும், வட கடலோர மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்து உள்ளது.

புயல் கரையை நெருங்கியதை தொடர்ந்து நேற்று மாலை முதலே கடலோர பகுதிகளில் தூறல் தொடங்கியது. அதிகாலை நேரத்தில் பலத்த மழையாக மாறியது. காற்றும் வீசியதால் காலை நேரத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

புயல் எச்சரிக்கை கூண்டு:

புயல் சின்னம் கரையை கடக்கும்போது மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் தரைக்காற்று பலமாக வீசும். தமிழக கடற்கரை பகுதியில் கடல் கொந்தளிப்பாக உள்ளது. அலைகள் பெரிய அளவில் எழுகின்றன. எனவே பாதுகாப்பு கருதி மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நாகை, கடலூர், காரைக்கால், புதுவை, பாம்பன், ராமேசுவரம், துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு வெள்ளிக்கிழமை மாலை ஏற்றப்பட்டது.

பள்ளிகளுக்கு விடுமுறை:

தமிழகம் மற்றும் புதுவையில் பெய்துவரும் கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், கடலூர், நாகை,திருவாரூர்,அரியலூர், தஞ்சாவூர், விழுப்புரம், ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More