தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

November 14, 2013

உத்திரபிரதேச மாநில அரசையும், மத்திய அரசையும் கண்டித்து ஆர்பாட்டம்!

சென்னை, நவ.14: முஸ்லீம்களை பாதுகாக்க தவறிய உத்திரபிரதேச மாநில அரசையும், மத்திய அரசையும் கண்டித்து நேற்று (13.11.2013) தென் சென்னை மாவட்டம் சார்பாக மாலை 04.00 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் ”மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெற்றது.

உத்திரபிரதேச மாநிலத்தில் 54 முஸ்லிம்களை கொலைசெய்யப்பட்டு, பல்லாயிரம் கோடி முஸ்லீம் சொத்துக்களை சூறையாடப்பட்டு, சொந்தநாட்டில் அகதிகளாக்கப்பட்ட முஸ்லீம்களை பாதுகாக்க தவறிய மத்திய மற்றும் மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மாநில பொதுச்செயலாளார் சகோ கோவை.ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் கண்டன உரையாற்றினார்கள். ஆயிரக்கணக்கில் மக்கள் பங்கேற்றனர். அல்லாஹு அக்பர்!

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More