தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

November 11, 2013

சட்டம் படிப்பு: கல்வி வழிகாட்டுதல் பகுதி

நவ.11: நமது இணையதளத்தில் கல்வி வழிகாட்டுதல் பகுதியில் சட்ட படிப்பு சம்மந்தமாக கேள்வி கேட்ட சகோதரருக்கு விளக்கம்.

அன்பு சகோதரர் லோகநாதன் அவர்கள் மீது அந்த ஓர் இறையின் சாந்தியும் சமாதனமும் நிலவட்டுமாக.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இனையதளத்தில் உங்கள் கல்வி தொடர்பான கேள்வியை பதிவு செய்தமைக்கு நன்றி. 


நீங்கள் 2005-ல் மோட்டார் வாகன பொறியியல் மூன்றாம் வருடம் வரை முடித்துவிட்டு ஒரு ஒரு தனியார் கடன் நிறுவனத்தில் வங்கி சட்ட பிரிவில் பணிபுரிந்து வருகின்றீர்கள் என்பதை உங்கள் கேள்வியில் இருந்து புரிந்து கொண்டோம். மேலும் சட்ட துறையில் சொத்து சட்ட பிரிவில் உங்கள் கல்வியை தொடர விரும்புகின்றீர்கள் என்பதையும் உங்கள் கேள்வியில் இருந்து புரிந்து கொள்ள முடிகின்றது.

ஆனால் சட்ட துறையில் நீங்கள் எந்த ஒரு படிப்பையும் பண்ணிரெண்டாம் வகுப்பு முடிக்காமல் படிக்க முடியாது என்பது நிதர்சனமான உண்மை. எனவே முதலில் +2 படிப்பை 50 % மதிபென் எடுத்து தேர்ச்சி பெறவும் அதன் பிறகு Diploma in Intellectual Property Law மற்றும் Diploma in Intellectual Property Right என்ற படிப்புகளை உங்களால் படிக்க இயலும்.

மேலும் விவரங்கள் வேண்டும் என்றால் எங்களை தொடர்பு கொள்ள தயங்க வேண்டாம்.

கல்வி சம்மந்தமாக உங்கள் கேள்விகளை கேட்க:

http://www.tntjpno.com/p/var-servicedomainwww_22.html

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More