தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

November 23, 2013

வணிக மேலான்மை படிப்பு: கல்வி வழிகாட்டுதல் பகுதி

நவ.23: நமது இணையதளத்தில் கல்வி வழிகாட்டுதல் பகுதியில் - MBA (முதுகலை வணிக மேலான்மை) சம்மந்தமாக கேள்வி கேட்ட சகோதரருக்கு விளக்கம்.

அன்பு சகோதரர் அப்துல் ரஹீம் அவர்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளையின் அதிகார பூர்வ இனையதளத்தின் கல்வி பகுதியை தொடர்பு கொண்டமைக்கு நன்றி.

தாங்கள் B.COM படித்து கொண்டு இருப்பதாகவும் உங்கள் வேலை வாய்பை வணிக மேலான்மையில் அமைத்து கொள்ளும் நோக்கத்தில் உள்ளதாகவும் உங்கள் கேள்வியில் இருந்து அறிந்து கொண்டோம்.

முதலிம் MBA என்றால் என்ன என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

உங்கள் ஊரில் அப்துல் காதர் என்பவர்ஒரு சாதாரன உணவகம் வைத்து நடத்துகின்றார் என்று வைத்துக் கொள்வோம். அந்த கடையில் அன்றாடம்என்ன நடக்கின்றது என்று பார்த்தாலே போதும் MBA என்றால் என்ன என்பதைநாம் எளிதில் புரிந்து கொள்ளலாம்.

அந்த கடையை கவணிக்கும் நபர் அதிகாலையில் உணவகத்திற்க்காக பால்பூத்தில் பால் வாங்குகிறார் பிறகு மளிகை கடைக்கு சென்று டீ தூள் சர்க்கரைஉணவு செய்வதற்க்கு தேவையான அனைத்து பொருட்களும் வாங்கிவருகிறார். நாள் முழுவதும் வியாபாரம் நடக்கின்றது. இரவு உணவகத்தைமூடும் முன் அவர் வரவு செலவு கணக்கு பார்க்கிறார்.

அப்துல் காதர் எதற்க்காக இந்த உணவகத்தை வைத்து வியாபாரம் செய்கிறார் பால், டீ தூள் மற்றும் உணவகத்திற்க்கு தேவையான அனைத்துபொருட்களையும் வாங்க, கடையில் உள்ளவர்களுக்கு சம்பளம் கொடுக்கமற்றும் அவரின் செலவுக்காக இந்த வியாபாரத்தை செய்கிறார். இந்தசெலவுகள் எல்லாவற்றிக்கும் அதிகம் பணம் தேவை. அவர் உழைப்பது இந்தலாபத்துக்காக தான்.

இது தான் பிசினஸ், அதாவது வியாபாரம். இதை தவிர்த்து பலவியாபாரங்களும் உள்ளன. சோப்பு , சீப்பு, மளிகை சாமாணகள் காய்கறி, பழம்,செல்போன், டி.வி, பிரிஜ், ஏர்கண்டிசனர், லேப்டாப் கம்பியூட்டர்,மாணவர்களுக்கு தேவையான நோட்டு புத்தகங்கள் என்று பல கடைகளில்விற்க்கபடுகின்றது. இதுவும் வியாபாரம் தான்.

இது மட்டும் தான் வியாபாரமா?? இல்லை இல்லை. உதாரணமாக நீங்கள்படிக்கும் கல்வி கூடங்களை எடுத்துக் கொள்ளலாம். இங்கேயும் பணம்கொடுக்கிறீர்கள். என்ன பொருள் வாங்குகிறீர்கள் ?? படிப்பு, அறிவு இது ஒருபொருள் இல்லையே ?

அதே போல் நாம் மருத்துவமனைக்கு செல்கின்றோம் அங்கு நமக்குமருத்துவர்களால் மருத்துவம் செய்யப்படுகின்றது. அதற்க்காக நாம்மருத்துவரிடம் பணம் கொடுக்கின்றோம்.

மருத்துவமனையாக இருந்தாலும் கல்வி நிறுவனங்களாக இருந்தாலும் இங்கேவிற்க்கபடுவது என்ன ?? ஒரு பொருளை இல்லை ஆனால் ஒரு சேவையை.

ஆம் வியாபாரம் என்பது லாபம் இட்டும் நோக்கத்தில் பொருளையோ அல்லது சேவையையோ விற்ப்பது.

பிசினஸ் மேனெஜ்மெண்ட் என்றால் என்ன ? வியாபார நிர்வாகம். ஒருநிர்வாகத்தின் பல செயல்களையும் ஒருங்கிணைந்து லாபம் ஈட்டுவது தான்பிசினஸ் மேனெஜ்மெண்ட் என்பதாகும்.

வியாபார நிர்வாகத்தில் அப்படி என்ன தான் இருக்கின்றன ? இப்போது அப்துல்காதர் செய்யும் வியாபாரத்தை பார்ப்போம்.

உணவு செய்வதற்க்கு டீ தூள், பால், அரிசி, எண்ணை, சமயல் எரிவாயு மற்றும்மளிகை பொருட்கள் எவ்வளவு இருக்கிறது என்று கணக்குப் போடுகிறாரே அதுதான் Inventory Control.

அவற்றை அனைத்தையும் வாங்குவது தான் பர்ச்சேஸ் மேனெஜ்மெண்ட்(Purchase Management).

உணவுகள் தயாரிப்பது புரொடக் ஷன்(Production)

வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் தரமாண உணவு தயாரித்துவாடிக்கையாளர்களை திருப்திபடுதுவது விற்ப்பனை.(Marketing)

அப்துல் காதர் உணவகம் என்று போர்டு வைத்திருக்கிறாரே அது விளம்பரம்.(Advertising)

கடையில் அமர்ந்து கல்லாவை நிர்வகிப்பது, வரவு செலவுக் கணக்குப் பார்ப்பதுநிதி நிர்வாகம்.(Finance Management)

கடையில் வேலை செய்யும் வேலையாட்கள் ஒழுங்காக வேலைசெய்கின்றார்களா என்று அப்துல் காதர் கவனிக்கின்றார்களே இது ஊழியர்நிர்வாகம்.(Personnel Management)

வேலை செய்வதற்க்கு எத்தனை ஆட்கள் தேவை என்று கணக்கு போடுவதுதான் மனித வள நிர்வாகம்.(Human Resource Management)

அத்தனை வேலைகளும் சரியாக நடந்து கொண்டு இருக்கிறதா என்று அப்துல்காதர் கவணித்துக் கொண்டு இருக்கிறாரே அது தான் பொது நிர்வாகம்.(Genaral Management)

இவை அனைத்தையும் ஒருங்கினைந்து லாபம் வர வைக்கிறாரே. இது தான்பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன். அதை பற்றி மிகவும் விரிவாக படிப்பது தான்MBA என்று கூறப்படும் Master of Bussiness Administration.

நாம் இங்கு உங்களுக்கு கூறி இருப்பது சாதாரன ஒரு உணவகத்தில் நடக்கும்வியாபாரத்தை பற்றி. இதே போல் ஒரு பண்னாட்டு நிறுவனத்தை எடுத்துக்கொண்டால் இந்த உணவகத்தில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் பெரியஅளவில் நடக்கும்.

ஒரு நிர்வாகத்தை வெற்றிகரமாக நடத்த நினைத்தால் நிர்வாகத்தின் எல்லாநடவடிக்கைகளையும் பற்றிய ஆழ்ந்த அறிவு வேண்டும். அதாவது.

  •   ஊழியர் நிர்வாகம்(Personnel Management)
  •   விற்பனை நிர்வாகம்(Marketing Management)
  •   மனித வள நிர்வாகம்(Human Resource Management)
  •   உற்ப்பத்தி நிர்வாகம்(Production Management)
  •   நிதி நிர்வாகம்(Finance Management)
  •  கம்ப்யூட்டர், தகவல் தொடர்பு நிர்வாகம் (Computer & Information Systems    Management)

இவை அனைத்தையும் ஒருங்கினைந்து படிப்பது தான் MBA. இதை தாம் MBAவில் கற்றுக் கொடுக்கின்றார்கள்.

இவை அனைத்தும் MBA வை பொருத்தவரை ஒரு ஒரு கடல் இதைமேலோட்டமாக தான் நாம் இங்கு பார்த்து இருக்கின்றோம். MBA வில் உள்ள பலதுறைகளான Human Resource Management, Supply Chain Management, Financial Management, Logistics & Shipping Management, Import & Export Management, Hotel Management, Airport Management etc போண்றவைகளில் மிகவும் விரிவாக இந்த 6நிர்வாகத்தை பற்றி தான் படிக்க வேண்டும்.

சுறுக்கமாக சொல்ல போணால் இது தான் MBA என்று சொல்லப்படும் Master of Business Administration.

அதிக செலவு இல்லாமல் MBA படிக்க வேண்டும் என்றால் பல நழைவு தேர்வுகள் உள்ளன உதாரனமாக MAT, GMAT, CAT மற்றும் TANCET.

இந்தியாவில் உள்ள பல முன்னனி நிகர் நிலை பல்கலைகழகங்களில் படிக்க MAT மற்றும் GMAT என்ற நுழைவு தேர்வுகள் உதவுகின்றன.

உலகின் முன்னனி வனிகம் மற்றும் நிர்வாகவியல் கல்வி நிறுவனமான IIM இல் படிக்க உதவும் நுழைவு தேர்வு CAT என்று அழைக்கபடுகின்றது.

TANCET என்ற நுழைவு தேர்வு இந்தியாவின் பிரபலமான பல்கலைகழகமான அண்ணா பல்கலைகழகத்தில் MBA படிக்க நடத்தபடும் தேர்வு ஆகும்.

முதலில் நீங்கள் செய்ய வேண்டியது இந்த நுழைவு தேர்வுகளுக்கு எப்போது விண்ணப்பங்கள் விநியோகிக்கின்றார்கள் என்று ஆய்வு செய்ய வேண்டும்.பிறகு அதற்காக விண்ணப்பிக்கவும்.

இந்த நுழைவு தேர்வுக்கு தயார் ஆவது என்பது மிகவும் சுலபமான ஒரு விஷயம். அதாவது இதன் கேள்விகள் கீழே குறிப்பிட்டு உள்ள ஐந்து துறையை சார்ந்து அமைந்து இருக்கும் 

1.ஆங்கில மொழி திறன்.(English Language Skills)
2.கணித திறன்.(Mathematical Skills)
3.புள்ளியியல்.(Statistical Skills)
4.பொது அறிவு.(General Knowledge)
5.நடப்பு விவரங்கள்.(Current Affairs)

இது தொடர்பாக கேள்விகளை எப்படி அறிந்து கொள்வது என்று பயப்பட வேண்டாம் பல கல்வியாளர்கள் இதில் கேட்கபடும் கேள்விகளை தொகுத்து புத்தகங்கள் பலவற்றை வெளியிட்டு உள்ளனர். இதில் ஏதாவது ஒன்றை வாங்கி இந்த தேர்வுகளுக்கு தயார் செய்தால் இந்த தேர்வுகளில் எளிதாக தேர்ச்சி பெறலாம்.

நான் உங்களுக்கு பரிந்துறைக்கும் புத்தகம் R.S.Agarwal என்ற ஆசிரியர் எழுதிய Quantitative Apptitude என்ற புத்தகம் ஆகும்.

இது தொடர்பாக மேலும் அறிந்து கொள்ள எங்களை தொடர்பு கொள்ள தயங்க வேண்டாம்.
கல்வி சம்மந்தமாக உங்கள் கேள்விகளை கேட்க:

http://www.tntjpno.com/p/var-servicedomainwww_22.html

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More