தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

November 14, 2013

சென்னை - நாகை இடையே புயல் சின்னம்!

சென்னை, நவ.14:தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரம் அடைந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி உள்ளது. நேற்று சென்னை அருகே 650 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை கொண்டிருந்த அந்த புயல் சின்னம், தற்போது மேலும் தீவிரம் அடைந்துள்ளது. அது மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது.

இந்த புயல் சின்னம் நாளை மறுநாள் மாலை நாகப்பட்டினம் அருகே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் இன்று நிருபர்களிடம் கூறியாவது:

வங்க கடலில் நேற்று நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி சென்னைக்கு கிழக்கு –தென்கிழக்கு திசையில் 550 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை கொண்டு உள்ளது. இது மேற்கு நோக்கி நகர்ந்து 16–ந்தேதி மாலை நாகப்பட்டினம் அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக நாளை 15–ந்தேதி இரவு முதல் மழை பெய்ய ஆரம்பிக்கும். காற்றும் பலமாக வீசத் தொடங்கும்.

வரும் 24 மணி நேரத்தை பொறுத்தவரை தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழையை எதிர்பார்க்கலாம். 16, 17 ஆகிய 2 நாட்களில் மிகப்பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
15–ந்தேதி முதல் வடகடலோர மாவட்டங்களில் காற்று மணிக்கு 55 கி.மீ. முதல் 65 கி.மீ. வரையிலான வேகத்தில் வீசும். அதிகபட்சமாக 75 கி.மீ. வேகம் வரை வீசக்கூடும். தென் கடலோர மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 60 கி.மீ. வேகத்துக்கு காற்று வீசும்.

கடலூர் மாவட்டத்திலும் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. எனவே கடலூர் துறைமுகம், தாழங்குடா, தேவனாம்பட்டினம் பகுதி மீனவர்கள், பரங்கிப்பேட்டை மீனவர்கள் 2–வது நாளாக இன்று மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் சுமார் 5 ஆயிரம் படகுகள் கரையில் ஓய்வெடுக்கின்றன.

கடல் சீற்றம் அதிகம் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், புதுச்சேரி, நாகை துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது.
புயல் வீசும் போது ஒதும் துஆ:
اَللّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا فِيهَا وَخَيْرَ مَا أُرْسِلَتْ بِهِ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ مَا فِيهَا وَشَرِّ مَا أُرْسِلَتْ بِهِ
அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)க கைரஹா வகைர மாபீ[F]ஹா வகைர மா உர்ஸிலத் பி(B]ஹி. வஅவூது பி(B](க்)க மின் ஷர்ரிஹா வஷர்ரி மா பீ[F]ஹா வஷர்ரி மா உர்ஸிலத் பி(B]ஹி
இதன் பொருள்:
இறைவா! இதில் உள்ள நன்மையையும், எந்த நன்மைக்காக இது அனுப்பப்பட்டதோ அந்த நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இதன் தீங்கை விட்டும், எந்தத் தீங்கைக் கொண்டு வருவதற்காக இது அனுப்பப்பட்டதோ அந்தத் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

ஆதாரம்: முஸ்லிம் 1496

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More