தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

November 25, 2013

புவனகிரி வெள்ளாற்று பாலத்தில் இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி!

புவனகிரி,நவ.25: புவனகிரி –கீரப்பாளையம் இடையே பழமையான வெள்ளாற்றுப்பாலம் உள்ளது. பழமையான இந்தப்பாலம் கடந்த சில ஆண்டுகளாக சேதமடைந்து காணப்பட்டது.

எனவே, சேதமடைந்த வெள்ளாற்று பாலத்தை சீரமைக்கக்கோரி பல்வேறு அமைப்புகள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தது. அதைத்தொடர்ந்து, சீரமைக்கும் பணிக்காக கடந்த 2–ந்தேதி புவனகிரி வெள்ளாற்று பாலம் இருபுறங்களிலும் அடைக்கப்பட்டு போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.


பின்னர், சேதமடைந்த பாலத்தை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அதில், ஒருபகுதி பாலம் சீரமைக்கப்பட்டு பணிகள் முடிவடைந்தது. அதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் மாலை முதல் ஆய்விற்காக இருசக்கர வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் சென்றுவரும் விதமாக திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால், கீரப்பாளையம்–புவனகிரி பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும், சேதமடைந்த மற்றொரு பகுதி பாலத்தை சீரமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More