தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

December 22, 2013

ஜனவரி 28 ”சிறை செல்லும் போராட்டம்” செயல் வீரர்கள் கூட்டம்!

கடலூர், டிச.22: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜனவரி 28 சிறை செல்லும் போரட்டம் - கடலூர் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் இன்று (22.12.2013) கடலூரில் மஞ்சக்குப்பம் தீன் திருமண மஹாலில் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர்கள் சகோ.ஆவடி இப்ராஹிம் மற்றும் சகோ.பத்ருல் ஆலம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இன்ஷாஅல்லாஹ் வருகின்ற ஜனவரி 28 சென்னை, நெல்லை, கோவை, திருச்சி ஆகிய நான்கு இடங்களில் முஸ்லிம்களுக்கு மத்தியில் 10 சதவீதம், மாநிலத்தில் 3.5 சதவீத இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்த கோரியும் “சிறை செல்லும் போராட்டம்” நடைபெறயிருகின்றது.

இதில் அந்தந்த கிளைகளில் செய்த விளம்பரங்கள், பிரச்சாரங்கள் இன்னும் செய்ய இருகின்ற பிரச்சாரம் மற்றும் சென்னையில் நடைபெறுகின்ற போராட்டதில் அதிகப்படியான மக்களை கலந்து கொள்ள செய்வது போன்றவற்றை பற்றி கலந்து ஆலோசிக்கப்பட்டது.

தமிழ்நாடு தவ்ஹீத் பரங்கிப்பேட்டை கிளையில் நடைபெற்றுயுள்ள ஜனவரி 28 சிறை செல்லும் போரட்டத்தின் பணிகள் பற்றி நகர தலைவர் சகோ.அமானுதீன் அவர்கள் விளக்கினார்கள்.

இதில் மாவட்டத்தின் அனைத்து பகுதிலிருந்தும் திரளான சகோதரர்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!









0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More