தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

December 11, 2013

பரங்கிப்பேட்டையில் ”கோமாரி நோய்” நோட்டீஸ் விநியோகம்!

பரங்கிப்பேட்டை, டிச.11: சமீப காலமாக மாடுகளை கோமாரி நோய் தாக்கி தமிழகத்தின் பல பகுதிகளில் மாடுகள் அதிகமாக இறந்தன. கடலூர் மாவட்டத்திலும் இந்த நோய் அதிகமாக பரவியது.

இதனை மக்களுக்கும் விழிப்புணர்வு செய்யும் விதமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - கடலூர் மாவட்டம் சார்பாக மாவட்டத்தின் அனைத்து கிளைகளும் நோட்டீஸ் வழங்கப்பட்டு அனைத்து தரப்பு மக்களிடமும் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.

அதன் அடிப்படையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ), பரங்கிப்பேட்டை கிளையில் இன்று (11.12.2013) பிறமத சகோதரர்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களிடம் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!
0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More